2027 சிலாங்கூர் வரவு செலவுத் திட்டம்: இளையோர் , முதியோர் நலனுக்கு முக்கியத்துவம்

25 செப்டெம்பர் 2026, 7:53 AM
2027 சிலாங்கூர் வரவு செலவுத் திட்டம்: இளையோர் , முதியோர் நலனுக்கு முக்கியத்துவம்
2027 சிலாங்கூர் வரவு செலவுத் திட்டம்: இளையோர் , முதியோர் நலனுக்கு முக்கியத்துவம்
2027 சிலாங்கூர் வரவு செலவுத் திட்டம்: இளையோர் , முதியோர் நலனுக்கு முக்கியத்துவம்

ஷா ஆலாம், செப் 25 - நவம்பர் மாதம் தாக்கல் செய்யப்படவுள்ள 2027 சிலாங்கூர் வரவு செலவுத் திட்டம், இளைஞர்கள் மற்றும் முதியோர்களின் நலன் உள்ளிட்ட சமூக-பொருளாதாரப் பிரச்சினைகளைக் கையாள்வதில் முக்கிய கவனம் செலுத்துமென சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமீருடின் ஷாரி தெரிவித்தார்.

இன்று சிலாங்கூர் அனைத்துலக வர்த்தக மையத்தில், மாநில வரவுசெலவுத் திட்டத்துக்கான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

அதில் உரையாற்றிய மந்திரி பெசார், வறுமையை ஒழிப்பதற்கும் மக்களுக்கு உதவுவதற்கும் ரொக்க உதவித் திட்டங்கள், திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் முதியோர் செயல்பாட்டு மையங்கள் (PAWE) அல்லது குழந்தைகள் காப்பகங்கள் அமைப்பது போன்ற மூன்று முக்கியத் திட்டங்களுக்கு மாநில அரசு கவனம் செலுத்தியது எனக் கூறினார்.

இதனிடையே, பள்ளி மாணவர்களுக்கான இலவச காலை உணவுத் திட்டம் மற்றும் டிரான்சிட் (transit) மையங்களை உருவாக்குவதன் மூலம் பெற்றோர்களின் சுமையைக் குறைக்கவும் மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

சிலாங்கூர் மக்களில் பெரும்பாலோர் தனியார் துறையில் பணிபுரிவதால், இந்தத் திட்டங்களை அரசு நிறுவனங்களுடன் மட்டும் நிறுத்திக் கொள்ளாமல், 'MamaKerja' போன்ற ரொக்க உதவிகள், காப்பாளர்களுக்கான பயிற்சி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடுகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து ஒரு வலுவான சூழல் அமைப்பை உருவாக்க அரசு உத்தேசித்துள்ளது என அமிரூடின் ஷாரி கூறினார்.

முன்னதாக, 'Selangor Juara, Rakyat Sejahtera' என்ற கருப்பொருளின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட 2026 சிலாங்கூர் வரவுசெலவுத் திட்டத்திற்கு RM3.23 பில்லியன் ஒதுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.