RM500 பில்லியன் பொருளாதாரத்தைத் தாண்டிய முதல் மாநிலமாக சிலாங்கூர் திகழவிருக்கிறது

11 ஆகஸ்ட் 2026, 5:02 PM
RM500 பில்லியன் பொருளாதாரத்தைத் தாண்டிய முதல் மாநிலமாக சிலாங்கூர்  திகழவிருக்கிறது

ஷா ஆலம்,ஆகஸ்ட் 12 : சிலாங்கூர் மாநிலம் தனது இலக்கை விட முன்னதாகவே 500 பில்லியன் ரிங்கிட் பொருளாதார மதிப்பை எட்டும் சாத்தியத்தைக் கொண்டுள்ளது.

இதன் மூலம், மலேசியாவிலேயே இந்த மைல்கல்லை எட்டும் முதல் மாநிலமாக சிலாங்கூர் உருவெடுக்கும்.

கடந்த ஜூலை மாத இறுதியில் சிலாங்கூரின் பொருளாதார செயல்திறன் குறித்த விளக்கமளிப்பின்போது, மலேசியாவின் துணைத் தலைமைப் புள்ளியியல் அதிகாரி வான் முகமட் ஷாருல்நிஜாம் வான் முகமட் நஜூரி இந்த எதிர்பார்ப்பைப் பகிர்ந்துக் கொண்டதாக, மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருதின் ஷாரி தெரிவித்தார்.

2018-ல் மாநில நிர்வாகத்திற்குத் தலைமை தாங்கத் தொடங்கிய போது, சிலாங்கூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (KDNK) 322.6 பில்லியன் ரிங்கிட்டாக இருந்தது.

இது நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தில் 23.7 சதவீதமாகும்.

"கடந்த ஆண்டில், அந்த மதிப்பு 460.1 பில்லியன் ரிங்கிட் அல்லது மலேசியப் பொருளாதாரத்தில் 26.5 சதவீதமாக உயர்ந்தது.

அதாவது, 2018-ல் நாட்டின் பொருளாதாரம் ஈட்டிய ஒவ்வொரு 10 ரிங்கிட்டில், 2 ரிங்கிட் 37 சென் சிலாங்கூரிலிருந்து வந்தது.

இப்போது, மலேசியப் பொருளாதாரத்தில் அதிகமான பங்களிப்பை சிலாங்கூர் வழங்குகிறது," என்று அவர் கூறினார்.

இந்த சாதனை வெறும் எண்கள் மட்டுமல்ல, மாறாக மக்கள், அரசு ஊழியர்கள், தொழில்முனைவோர், விவசாயிகள் மற்றும் இளைஞர்கள் உட்பட பல்வேறு தரப்பினரின் கூட்டு உழைப்பின் பலன் என்றும், அவர்களே மாநில பொருளாதார வளர்ச்சியின் உந்துசக்தி என்றும் அமிருதின் கூறினார்.

வெற்றிகரமாக ஈர்க்கப்பட்ட முதலீடுகள், நிலையான கொள்கை அமலாக்கம் மற்றும் மாநிலத்தின் மீது முதலீட்டாளர்கள் கொண்டுள்ள தொடர்ச்சியான நம்பிக்கை ஆகியவற்றின் காரணமாக சிலாங்கூரின் பொருளாதார அடித்தளம் இப்போது வலுவாக உள்ளது என்று அவர் தெரிவித்தார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.