அதிகாரப்பூர்வத் தகவலுக்காக ஏங்கியிருக்கும் 55 மலேசியர்களின் குடும்பங்கள்

24 செப்டெம்பர் 2026, 3:36 AM
அதிகாரப்பூர்வத் தகவலுக்காக  ஏங்கியிருக்கும்  55 மலேசியர்களின் குடும்பங்கள்
அதிகாரப்பூர்வத் தகவலுக்காக  ஏங்கியிருக்கும்  55 மலேசியர்களின் குடும்பங்கள்

ஷா ஆலாம், செப் 24 : நேபாளத்தில் ஏற்பட்ட பெரும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுக்குப் பிறகு இன்னும் தொடர்பு கொள்ள முடியாத 55 மலேசியர்களின் குடும்பத்தினர், தங்கள் அன்புக்குரியவர்கள் கண்டுபிடிக்கப்படுவார்கள் என்று இன்னும் நம்புகின்றனர்.

அவர்களின் நிலை குறித்த அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தப்பட்ட தகவல் கிடைக்கும் வரை எந்தவொரு முடிவிற்கும் வர விரும்பவில்லை என, மலேசியா சாலிடாரிட்டி: ஃபேமிலிஸ் இன் ஹோப் ( Malaysia Solidarity: Families in Hope - MASFIH) அமைப்பின் செய்தித் தொடர்பாளர் டாக்டர் மணிவண்ணன் ரெத்தினம் தெரிவித்தார்.

29 நாட்கள் கடந்தப் போதிலும், அவர்கள் கண்டுபிடிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இன்னும் இருப்பதாக குடும்பத்தினர் நம்புவதாக 'ஹரியான் மெட்ரோ'செய்தி வெளியிட்டது.

"எங்களுக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது, இன்னும் ஒரு அதிசயம் நடக்கலாம் என்று நாங்கள் நம்புகிறோம்."29 நாட்களுக்குப் பிறகு, இந்த நிலைமை மிகவும் கடினமாகி வருவதை நாங்கள் உணர்கிறோம்.

இருப்பினும், அவர்களில் சிலர் வேறு பகுதிகளுக்கு அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம், உள்ளூர் மக்களால் உதவப்பட்டிருக்கலாம் அல்லது தகவல் தொடர்பு வசதி இல்லாத தொலைதூரப் பகுதியில் இருக்கலாம் என்ற சாத்தியக்கூறுகளையும் எங்களால் நிராகரிக்க முடியாது," என்று அவர் தொடர்பு கொண்டபோது கூறினார்.

இன்னும் தொடர்பு கொள்ள முடியாத கோமதி ரெத்தினத்தின் சகோதரரான மணிவண்ணன், அதே நேரத்தில் குடும்பத்தினர் எந்தவொரு சூழ்நிலையையும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் கூறினார்.

"ஒருவேளை யாரையாவது காப்பாற்ற முடியாமல் போயிருந்தால், அவர்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அடையாளம் காணப்பட்டு, அந்தந்த மத மற்றும் நம்பிக்கைகளின்படி இறுதி மரியாதை செலுத்துவதற்காக வீட்டிற்கு கொண்டு வரப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்.

"எங்களைப் பொறுத்தவரை மிகவும் வேதனையான விஷயம் என்னவென்றால், எங்கள் அன்புக்குரியவர்களுக்கு என்ன நடந்தது என்று தெரியாமல் இருப்பதுதான். அதனால்தான், உறுதியான பதில் கிடைக்கும் வரை தேடுதல் பணி தொடர வேண்டும்," என்று அவர் கூறினார்.

இதனிடையே,தேடுதல் முயற்சிகள் பாதிக்கப்பட்டவர்களின் நிலை குறித்து உறுதியான பதிலை அளிக்கத் தவறினால், அந்த 55 மலேசியர்களின் குடும்பங்களுக்கு உதவுவதற்காக ஒரு அதிகாரப்பூர்வ அணுகுமுறையை(mechanism) உருவாக்கப் பரிந்துரைத்த பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமிற்கு MASFIH தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டது.

நேற்று முன்தினம் மலேசியர்களின் நிலை குறித்து நேபாள பிரதமர் பாலேந்திர ஷாவுடன் அன்வார் நேரடியாக நடத்திய பேச்சுவார்த்தையை தங்களது தரப்பு வரவேற்பதாகவும் மணிவண்ணன் கூறினார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.