நேபாளத்தில் ஆற்று வெள்ளத்தால் 100-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு மலையேற்றப் பயணிகள் தவிப்பு

12 அக்டோபர் 2026, 4:52 PM
நேபாளத்தில் ஆற்று வெள்ளத்தால் 100-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு மலையேற்றப் பயணிகள் தவிப்பு

காத்மாண்டு, அக் 13 – மத்திய நேபாளத்தில் வார இறுதியில் ஏற்பட்ட ஆற்று வெள்ளம், மலையேற்றப் பாதைகளையும் பாலங்களையும் அடித்துச் சென்றதால், 100-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு மலையேற்றப் பயணிகள் (Trekkers) பல்வேறு இடங்களில் சிக்கித் தவிப்பதாக அதிகாரி தெரிவித்தார்.

காத்மாண்டுவிற்கு மேற்கே சுமார் 100 கி.மீ தொலைவில் உள்ள கோர்க்கா (Gorkha) மாவட்டத்தில், வார இறுதியில் விடியற்காலையில் ஏற்பட்ட நிலச்சரிவு, புதி கண்டகி (Budhi Gandaki) ஆற்றை அடைத்தது.

இதனால் ஆற்றின் கீழ்மடைப் பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனையடுத்து, 12 வெளிநாட்டவர்கள் உட்பட 321 பேரை அதிகாரிகள் திங்கள்கிழமை மீட்டனர்.

ஆற்றில் நீர்மட்டம் குறைந்தபோதிலும், மீட்புப் பணிகள் செவ்வாய்க்கிழமையும் தொடரும் என்று ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்த ஆறு திரிசூலி (Trishuli) ஆற்றின் ஒரு துணையாறாகும்.

கடந்த ஆகஸ்ட் மாதம் இதே பகுதியின் மற்றொரு துணையாற்றில் பனிப்பாறை உடைந்ததால் ஏற்பட்ட பேரழிவு வெள்ளத்தில் 1,457 பேர் உயிரிழந்தனர், மேலும் ஆயிரக்கணக்கானோர் இன்னும் காணாமல் போயுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அண்மைய வெள்ளத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை.

இருப்பினும், கருப்பு நிற சேறும் சகதியும் மற்றும் இடிபாடுகளும் வீடுகளை அடித்துச் சென்றதோடு, மூன்று நீர்மின் நிலையங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்புகளையும் சேதப்படுத்தியதால், ஐந்து கிராம மக்கள் தொடர்புகொள்ள முடியாத நிலையில் உள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மலையேற்றப் பாதையின் ஒரு பகுதி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால், பல்வேறு இடங்களில் 100-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு மலையேற்றப் பயணிகள் திரும்பி வர முடியாமல் தவித்து வருவதாக, பிரபல மலையேற்றப் பாதையை உள்ளடக்கிய மனஸ்லு பாதுகாப்புப் பகுதி திட்டத்தின் (Manaslu Conservation Area Project) அதிகாரி புவன் ராஜ் ஓஜா தெரிவித்தார்.

வெள்ளம் காரணமாகத் திரும்பி வர விரும்பும் மலையேற்றப் பயணிகளை மீட்க வேண்டியுள்ளது.

தங்களது பயணத்தைத் தொடர விரும்புவோர், பாதுகாப்பாக இருக்கும் இடங்களில் இருந்து அதைத் தொடரலாம்" என்று ஓஜா ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

மேலும், "மலையேற்றப் பாதையில் உணவகங்களும் தங்கும் விடுதிகளும் உள்ளன. அவை பாதுகாப்பாகவே இருக்கின்றன" என்றும் அவர் குறிப்பிட்டார்.

வகைantarabangsa

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.