ஷா ஆலாம், செப்.23 — சிலாங்கூரில் உள்ள ஆறு காற்றுத் தரக் கண்காணிப்பு நிலையங்களிலும் நேற்று முதல் மிதமான காற்று மாசுபாடு குறியீட்டு (API) அளவுகள் பதிவாகியுள்ளன.
இன்று பிற்பகல் 3 மணிக்கு ஜோஹான் செத்தியாவில் 76 என்ற API அளவு பதிவானது.
இதனைத் தொடர்ந்து ஷா ஆலாம் (72), பெட்டாலிங் ஜெயா (70), கோலா சிலாங்கூர் (66), கிள்ளான் (57) மற்றும் பந்திங் (54) என API பதிவாகியுள்ளன.
பெட்டாலிங், கோம்பாக் மற்றும் உலு லாங்காட் உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று மாலை 6 மணி வரை இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இதற்கிடையில், சரவாக்கில் உள்ள அனைத்து 13 நிலையங்களிலும் ஆரோக்கியமற்ற API அளவுகள் பதிவாகியுள்ளன.
தீபகற்பத்தின் வடக்குப் பகுதியில் உள்ள திரங்கானு, கெடா, கிளந்தான், பெர்லிஸ் மற்றும் பகாங் ஆகிய மாநிலங்களில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி நல்ல காற்றுத் தரக் குறியீடு (API) கொண்ட இடங்களின் எண்ணிக்கை ஒன்பதாக அதிகரித்துள்ளது.







