ஷா ஆலாம், செப்.23: இன்று சிலாங்கூரில் 3 மாவட்டங்களில் மாலை 6 மணி வரை இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) எச்சரிக்கை விடுத்துள்ளது.
அவை பெட்டாலிங், கோம்பாக் மற்றும் உலு லங்காட் ஆகிய மாவட்டங்களாகும்.
இதே எச்சரிக்கை கோலாலம்பூர் மற்றும் கெடா, பேராக், கிளந்தான், திரங்கானு, பகாங், நெகிரி செம்பிலான், ஜோகூர், சரவாக் மற்றும் சபாவில் உள்ள பல்வேறு பகுதிகளையும் உள்ளடக்கியது.






