செப்பாங்கில் மாலை 4 வரை கனமழை எச்சரிக்கை

23 செப்டெம்பர் 2026, 5:33 AM
செப்பாங்கில் மாலை 4 வரை கனமழை எச்சரிக்கை

ஷா ஆலாம், செப். 23 — சிலாங்கூரின் செப்பாங் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலை 4 மணி வரை இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என மலேசிய வானிலை ஆய்வுத் துறை (MetMalaysia) எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த எச்சரிக்கை புத்ராஜெயாவுக்கும் விடுக்கப்பட்டுள்ளது. அதேவேளை, கெடாவில் குபாங் பாசு, கோத்தா செத்தார், போக்கோக் சேனா, பாடாங் திராப், சிக், பெண்டாங், கோலா மூடா, யான் மற்றும் பாலிங் ஆகிய பகுதிகளிலும் இந்த வானிலை நிலவும்.

பேராக்கில் உலு பேராக் பகுதியும், பகாங் மாநிலத்தில் ஜெராந்துட் மற்றும் பெந்தோங் பகுதிகளும் இந்த வானிலை எச்சரிக்கைக்குள் அடங்குகின்றன.

நெகிரி செம்பிலானில் போர்ட் டிக்சன், சிரம்பான் மற்றும் ரெம்பாவ் ஆகிய இடங்களிலும் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜோகூரில் கூலாய், ஜோகூர் பாரு, பொந்தியான், கோத்தா திங்கி மற்றும் குளுவாங் ஆகிய பகுதிகளுக்கும் இதே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, சரவாக் மற்றும் சபாவிலுள்ள சில பகுதிகளும் இந்த எச்சரிக்கைப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.