ஈப்போவில் சுகாதார அமைச்சின் வேன் விபத்துக்குள்ளானதில் 9 பேர் காயம்

23 செப்டெம்பர் 2026, 4:55 AM
ஈப்போவில் சுகாதார அமைச்சின் வேன் விபத்துக்குள்ளானதில் 9 பேர் காயம்

ஈப்போ, செப். 23 — தஞ்சோங் ரம்புத்தான் சுகாதார அமைச்சின் பயிற்சி நிறுவனத்தில் (ILKKM) பயிலும் பயிற்சியாளர்களை ஏற்றிச் சென்ற அந்த அமைச்சின் வேன் ஒன்று விபத்துக்குள்ளானது.

இன்று காலை சுமார் 7.25 மணியளவில் ஜாலான் சுல்தான் இஸ்கண்டார் மற்றும் ஜாலான் சுல்தான் யூசோப் சந்திப்பில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

இதில் வேன் ஓட்டுநர் உட்பட மொத்தம் ஒன்பது பேர் காயமடைந்துள்ளதாக ஈப்போ மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி முகமட் நஜிப் ஹம்சா தெரிவித்தார்.

ஆரம்பகட்ட விசாரணையில், தஞ்சோங் ரம்புத்தானிலிருந்து புந்தோங் சுகாதார கிளினிக்கிற்குப் பயிற்சியில் ஈடுபடுவதற்காக பயிற்சியாளர்களை ஏற்றிச் சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டது தெரிய வந்துள்ளது.

சம்பவத்தின் போது வேனில் மொத்தம் 11 பேர் இருந்தனர். இந்த விபத்தில் மற்றொரு வாகனமும் சம்பந்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. எனினும், விபத்துக்கான உண்மையான காரணம் இன்னும் விசாரணையில் உள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்களின் தற்போதைய நிலை குறித்த தகவல்கள் இதுவரை கிடைக்கவில்லை.

இதனிடையே, இச்சம்பவம் தொடர்பான எட்டு விநாடிகள் கொண்ட காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.