சிறைகளுக்குள் தடைசெய்யப்பட்ட பொருட்கள்: போலீஸாரிடம் தெரிவிக்க சிறைத்துறை வலியுறுத்தல்

22 செப்டெம்பர் 2026, 2:01 PM
சிறைகளுக்குள் தடைசெய்யப்பட்ட பொருட்கள்: போலீஸாரிடம் தெரிவிக்க சிறைத்துறை வலியுறுத்தல்

ஷா ஆலாம், செப்.22 — சிறைச்சாலைக்குள் தடைசெய்யப்பட்ட பொருட்கள் கொண்டு வரப்படுவது தொடர்பான தகவல்கள் அல்லது புகார்கள் இருந்தால், போலீஸாரிடம் தெரிவிக்குமாறு மலேசிய சிறைத்துறை பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டுகள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்பான ஆதாரங்களின் அடிப்படையில் உறுதி செய்து, விசாரணை மேற்கொள்வதற்கு இத்தகைய தகவல்களை அதிகாரப்பூர்வ வழிகளில் தெரிவிப்பது முக்கியம் என சிறைத்துறை தெரிவித்துள்ளது.

சிறைச்சாலை அதிகாரிகள் தவறான நடவடிக்கைகளில் ஈடுபடுவது, சட்டத்தை மீறுவது அல்லது சிறைகளுக்குள் தடைசெய்யப்பட்ட பொருட்கள் கொண்டு வரப்படுவது தொடர்பான எந்தவொரு புகார் அல்லது குற்றச்சாட்டும் போலீஸாரிடம் தெரிவிக்கப்பட வேண்டும்

சிறைகளுக்குள் தடைசெய்யப்பட்ட பொருட்கள் கொண்டு வரப்படுவதற்கு மூத்த அதிகாரிகள் சிலர் வசதி செய்து கொடுப்பதாக ஊடகங்களில் வெளியான தகவல்களைத் தொடர்ந்து சிறைத்துறையின் இந்த விளக்கம் வெளியாகியுள்ளது.

சிறைச்சாலைகளில் பாதுகாப்புக் கட்டுப்பாடு, சோதனை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் அனைத்தும் நடைமுறையில் உள்ள SOPகளுக்கு ஏற்ப மேற்கொள்ளப்படுவதாகவும் சிறைத்துறை கூறியுள்ளது.

அதேவேளையில், சாத்தியமான ஆபத்துகள், அச்சுறுத்தல்கள் அல்லது விதிமீறல்களை அடையாளம் காண்பதற்காக உளவுத்துறை நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு ஆய்வுகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அது தெரிவித்தது.

மேலும், பொதுமக்கள் தகவல்களைப் பெறும்போது நம்பகமான மற்றும் அதிகாரப்பூர்வ ஆதாரங்களை மட்டுமே நாட வேண்டும். உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தொடர்பில் ஊகங்களை வெளியிடுவதையோ அவற்றைப் பரப்புவதையோ தவிர்க்க வேண்டும் என்றும் சிறைத்துறை அறிவுறுத்தியுள்ளது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.