கோலாலம்பூர், மே 22: ஹஜ் பெருநாள் பண்டிகையை முன்னிட்டு மே 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் சிறைவாசிகள் தங்களது குடும்பத்தினரை நேரில் சந்திப்பதற்கான சிறப்பு அனுமதியை மலேசிய சிறைச்சாலைகள் துறை வழங்கியுள்ளது.
இந்தச் சந்திப்பு, நன்னடத்தை மறுவாழ்வு மையங்கள், சிறப்பு மறுவாழ்வு மையங்கள், சிறப்புத் தடுப்பு மையங்கள் மற்றும் ஹென்றி கர்னி பள்ளிகள் உள்ளிட்ட அனைத்துச் சிறைச்சாலை நிறுவனங்களுக்கும் பொருந்தும் என இன்று வெளியிட்ட அறிக்கையில் அத்துறை தெரிவித்துள்ளது.
"பார்வையிடும் நேரம் காலை 8.15 மணி முதல் மாலை 4.15 மணி வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது; இஸ்லாமியச் சிறைவாசிகளுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படும்.
"பார்வையாளர்கள் சிறைவாசிகளுக்கு உணவு மற்றும் பானங்களைக் கொண்டுவர அனுமதி இல்லை, மாறாகச் சிறைச்சாலை உணவகத்திலேயே (கேன்டீன்) அவற்றை வாங்கிக் கொள்ளலாம்," என்று அறிக்கையில் குறிப்பிடப்படுள்ளது.
மேலும், சிறைவாசிகளுக்கு அனைத்து அடிப்படை வசதிகளும் வழங்கப்பட்டுள்ளதால் பார்வையாளர்கள் அவர்களுக்குப் பணம் கொடுப்பது ஊக்குவிக்கப்படுவதில்லை. இருப்பினும், தேர்வு கட்டணம் செலுத்துவது போன்ற சில குறிப்பிட்ட தேவைகளுக்குப் பணம் கொடுக்கலாம்; இதற்குச் சிறை நிர்வாகத்திடம் இருந்து PPT 28 என்ற அதிகாரப்பூர்வ ரசீதைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
பார்வையாளர்கள் சிறைச்சாலைச் சட்டம் மற்றும் விதிமுறைகளுக்கு உட்பட்டவர்கள் என்பதால், சிறைச்சாலை வளாகத்திற்குள் நுழையும்போதும் வெளியேறும்போதும் சிறை அதிகாரிகள் அவர்களை உடல் பரிசோதனை செய்ய அனுமதி உண்டு என்றும் அத்துறை தெரிவித்தது.
இதற்கிடையில், சிறைச்சாலைக்கு நேரில் வர இயலாத குடும்பத்தினருக்காக மே 30 முதல் ஜூன் 1 வரை இணையவழி (ஆன்லைன்) சந்திப்புகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்த மேல் விவரங்களைப் பெற விரும்பும் குடும்பத்தினர், சம்பந்தப்பட்டச் சிறை நிர்வாகத்தை நேரடியாகத் தொடர்புகொள்ளலாம்.
ஹஜ் பெருநாளை முன்னிட்டு கைதிகளை நேரில் சந்திக்க குடும்பத்தினருக்கு அனுமதி
22 மே 2026, 6:41 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
national
உரிமம் ரத்து செய்யப்பட்டும் வாகனம் ஓட்டினால் 3 ஆண்டுகள் வரை சிறை
Shalini Rajamogun
21 ஜூலை 2026

national
ஆபத்தான முறையில் வாகனத்தை ஓட்டிய முன்னாள் விரைவுப் பேருந்து ஓட்டுநருக்கும் அவரது காதலிக்கும் சிறைத்தண்டனை
Shalini Rajamogun
17 ஏப்ரல் 2026

national
சுங்கை பூலோ சிறைச்சாலையில் கைதி தப்பியோட்டம் - வைரலாகும் காணொளி குறித்து சிறைத்துறை தீவிர விசாரணை
Shalini Rajamogun
13 ஏப்ரல் 2026

national
வீட்டுக் காவல் தீர்ப்புக்காக நஜிப்பின் ஆதரவாளர்கள் நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே திரண்டனர்
Evelyn Moses
22 டிசம்பர் 2025

வகைnational
உங்கள் கருத்து என்ன?



