சிங்கப்பூர் செல்லும் வெளிநாட்டு வாகனங்களுக்கு நுழைவு அனுமதி கட்டாயம்

22 செப்டெம்பர் 2026, 1:14 PM
சிங்கப்பூர் செல்லும் வெளிநாட்டு வாகனங்களுக்கு நுழைவு அனுமதி கட்டாயம்

சிங்கப்பூர், செப்.22 — சிங்கப்பூருக்குள் சோதனைச் சாவடிகள் வழியாக நுழையும் அனைத்து வெளிநாட்டு வாகனங்களும், வாகன நுழைவு அனுமதியை (Vehicle Entry Permit – VEP) கட்டாயம் பெற்றிருக்க வேண்டும்

இது எதிர்வரும் அக்டோபர் 6ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று சிங்கப்பூர் குடிநுழைவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) தெரிவித்துள்ளது.

வூட்லண்ட்ஸ் அல்லது துவாஸ் சோதனைச் சாவடிகள் வழியாக காரில் சிங்கப்பூருக்குள் நுழையும் பயணிகள், சிங்கப்பூர் வருகை அட்டையை (SG Arrival Card – SGAC) சமர்ப்பிப்பதற்கு முன்பாக தங்களது வாகனத்துக்கு செல்லுபடியாகும் VEP இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

SGAC சமர்ப்பிக்கப்படும் நேரத்தில் வெளிநாட்டில் பதிவு செய்யப்பட்ட வாகனத்தின் VEP நிலையை ICA-வின் அமைப்பு தானாகச் சரிபார்க்கும். வாகனத்துக்கு செல்லுபடியாகும் VEP இல்லாவிட்டால், சம்பந்தப்பட்ட வாகனத்தின் ஓட்டுநர் மட்டுமின்றி அதில் பயணிக்கும் பயணிகளுக்கும் எச்சரிக்கை விடுக்கப்படும் என்று ICA தெரிவித்துள்ளது.

இதனிடையே, செல்லுபடியாகும் VEP இருப்பது, சம்பந்தப்பட்ட வாகனத்துக்கு சிங்கப்பூரில் கட்டாயமாக்கப்பட்டுள்ள மோட்டார் வாகனக் காப்புறுதி பாதுகாப்பு இருப்பதையும் உறுதி செய்வதாக ICA குறிப்பிட்டுள்ளது.

சிங்கப்பூரில் பயணிக்கும் போது எதிர்பாராதவிதமாக சாலை விபத்து ஏற்பட்டால், உரிய காப்புறுதிப் பாதுகாப்பு இருப்பது முக்கியமானது என்றும் ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே, அக்டோபர் 6ஆம் தேதி முதல் சிங்கப்பூருக்குள் வாகனத்தில் நுழையத் திட்டமிடும் வெளிநாட்டு வாகன உரிமையாளர்கள், பயணத்தைத் தொடங்குவதற்கு முன்பாக தங்களது VEP மற்றும் மோட்டார் வாகனக் காப்புறுதி இரண்டும் இருப்பதை உறுதி செய்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

வகைantarabangsa

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.