ஷா ஆலாம், செப். 22 — இன்று பிற்பகல் 3 மணியளவில் சிலாங்கூரில் உள்ள அனைத்து காற்றுத் தரக் கண்காணிப்பு நிலையங்களிலும் காற்று மாசுக் குறியீடு, ஏபிஐ மிதமான நிலையில் உள்ளது.
ஷா ஆலாம் மற்றும் ஜோஹான் செத்தியா ஆகிய இரு பகுதிகளிலும் ஏபிஐ அளவு 85ஆக குறைந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து பெட்டாலிங் ஜெயாவில் 82, கிள்ளானில் 72, பந்திங்கில் 70, கோலா சிலாங்கூரில் 62 என்ற அளவில் காற்று மாசுக் குறியீடு பாதிவாகியுள்ளது .
நாடு முழுவதும் அதிகபட்ச ஏபிஐ அளவு சரவாக் மாநிலத்தில் பதிவாகியுள்ளது. சிபுவில் 175 என்ற அளவில் அதிகபட்ச காற்று மாசுக் குறியீடு உள்ள நிலையில், முகா மற்றும் ஸ்ரீ அமான் ஆகிய இரு பகுதிகளிலும் தலா 172 , சரிகேயில் 160 என ஏபிஐ பதிவாகியுள்ளது.
சிலாங்கூரில் நேற்று முதல் காற்றுத் தரத்தில் முன்னேற்றம் காணப்பட்டது. கிள்ளான் பள்ளத்தாக்கு முழுவதும் நேற்று பெய்த கனமழையைத் தொடர்ந்து புகைமூட்டத்தின் தாக்கம் குறைந்துள்ளது.
இதே கனமழை காரணமாக கோலாலம்பூரின் சில பகுதிகளில் திடீர் வெள்ளமும் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.







