வீட்டுக் காவல்: நஜீப் இன்னும் RM50 மில்லியன் அபராதம் செலுத்தவில்லை

21 செப்டெம்பர் 2026, 8:23 AM
வீட்டுக் காவல்: நஜீப் இன்னும் RM50 மில்லியன் அபராதம் செலுத்தவில்லை

காஜாங், செப்.21 — முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், மீதமுள்ள சிறைத்தண்டனையை வீட்டுக் காவலில் அனுபவிப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள RM50 மில்லியன் அபராதத்தை இதுவரை செலுத்தவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் தொடங்கப்பட்டு விசாரிக்கப்பட்டதால், அபராதத் தொகையை அந்த நீதிமன்றத்தின் பதிவாளர் அலுவலகத்திலேயே செலுத்த வேண்டும் என அட்டர்னி ஜெனரல் டான் ஸ்ரீ முகமட் துசுக்கி முக்தார் கூறினார்.

இதனிடையே, நஜிப்பை வீட்டுக் காவலில் வைக்கும் நடைமுறை தொடர்பான செயல்பாட்டு வழிகாட்டுதல்கள் அல்லது நிலையான செயல்பாட்டு நடைமுறைகள் (SOP) மலேசிய சிறைத்துறை மூலம் வெளியிடப்படும்.

இதற்கிடையில், காஜாங் சிறைச்சாலையின் வளாகத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பின்போது, நஜிப்பை வீட்டுக் காவலுக்கு மாற்றுவது தொடர்பான எந்தவொரு நடவடிக்கையும் அல்லது வாகனப் புறப்பாடும் காணப்படவில்லை.

73 வயதான நஜிப், SRC International Sdn Bhd நிறுவனத்துடன் தொடர்புடைய RM42 மில்லியன் நிதி முறைகேடு வழக்கில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23ஆம் தேதி முதல் காஜாங் சிறைச்சாலையில் தண்டனையை அனுபவித்து வருகிறார்.

கடந்த செப்டம்பர் 18ஆம் தேதி, மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், நஜிப்பின் வழக்கில் எஞ்சியுள்ள சிறைத்தண்டனையை வீட்டுக் காவல் முறையில் அனுபவிப்பதற்கு நிபந்தனையுடன் மன்னிப்பு வழங்கியிருந்தார்.

நஜிப்பின் சிறைத்தண்டனை 2028ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23ஆம் தேதி வரை வீட்டுக் காவல் முறையில் தொடர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் RM50 மில்லியன் அபராதத்தைச் செலுத்துவதும், விதிக்கப்பட்டுள்ள பிற நிபந்தனைகளைப் பின்பற்றுவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.