முதலுதவி அறிவு அவசியம்; குடும்பத்தினரின் உயிரைக் காப்பாற்ற உதவும் — நிபுணர்

21 செப்டெம்பர் 2026, 7:11 AM
முதலுதவி அறிவு அவசியம்; குடும்பத்தினரின் உயிரைக் காப்பாற்ற உதவும் — நிபுணர்

ஷா ஆலாம், செப்.21 — முதலுதவி குறித்த அடிப்படை அறிவு, பொது இடங்களில் அறிமுகமில்லாதவர்களுக்கு உதவுவதற்காக மட்டுமல்லாமல், அவசர நிலை ஏற்படும் போது சொந்த குடும்ப உறுப்பினர்களின் உயிரைக் காப்பாற்றவும் அவசியமாகிறது.

மேலாண்மை மற்றும் அறிவியல் பல்கலைக்கழகத்தின் (MSU) சுகாதாரம் மற்றும் வாழ்க்கை அறிவியல் புலத்தின் தொழில்முறை சுகாதார மேலாண்மைத் துறைத் தலைவர் ஹம்டான் இப்ராஹிம் இதனைத் தெரிவித்தார்.

மேலாண்மை மற்றும் அறிவியல் பல்கலைக்கழகத்தின் (MSU) சுகாதாரம் மற்றும் வாழ்க்கை அறிவியல் புலத்தின் தொழில்முறை சுகாதார மேலாண்மைத் துறைத் தலைவர் ஹம்டான் இப்ராஹிம்

அவசரநிலை எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம். குறிப்பாக வீட்டிலேயே கணவன், மனைவி, பிள்ளைகள் அல்லது பெற்றோருக்கு திடீர் உடல்நலப் பிரச்சனை ஏற்படக்கூடும் என்பதால், முதலுதவி அறிவு ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

பொதுமக்களில் பலர், ஒருவர் பொது இடத்தில் திடீரென மயங்கி விழுந்தால் மட்டுமே முதலுதவி அறிவு தேவைப்படும் எனக் கருதுவதாக ஹம்டான் கூறினார்.

ஆனால், வீட்டிலும் எந்நேரத்திலும் அவசரநிலை ஏற்படக்கூடும் என்பதால், சம்பவம் நிகழும்போது பாதிக்கப்பட்டவருடன் இருக்கும் முதல் நபராக குடும்ப உறுப்பினர் இருக்கக்கூடும்.

சமூகத்தில் முதலுதவி குறித்த விழிப்புணர்வு மேலும் அதிகரிக்கப்பட வேண்டும். அவசரநிலை ஏற்படும் போது மருத்துவமனை அல்லது ஆம்புலன்ஸ் சேவையை மட்டுமே முழுமையாகச் சார்ந்திருக்கும் நிலை மாற்றப்பட வேண்டும் என்றார்.

மருத்துவக் குழுவினர் சம்பவ இடத்தை வந்தடையும் வரையிலான ஆரம்ப சில நிமிடங்கள், பாதிக்கப்பட்டவருக்கு மிகவும் முக்கியமான காலகட்டமாக இருக்கக்கூடும் என்பதால், அவசர முதலுதவி குறித்த அடிப்படை அறிவு பொதுமக்களுக்கு அவசியம்.

சமூகங்கள் மற்றும் பணியிடங்களில் முதலுதவி, இதய-நுரையீரல் மீட்பு சிகிச்சையான CPR உள்ளிட்ட பயிற்சிகள் மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட வேண்டும் என்றும் ஹம்டான் வலியுறுத்தினார்.

இதனிடையே, பல்வேறு வளாகங்கள் மற்றும் பொது கட்டிடங்களில் தற்போது வைக்கப்பட்டுள்ள AED சாதனத்தைப் பயன்படுத்த பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

AED சாதனம் பொதுமக்களே பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், சாதனத்தில் வழங்கப்படும் வழிகாட்டுதல்களைப் பின்பற்றினாலே போதுமானது என்றார்.

அதேவேளை, குறிப்பாக சிறு பிள்ளைகள் உள்ள வீடுகளில் முதலுதவிப் பெட்டி அல்லது ‘First Aid Kit’ கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.

எனவே, வீட்டில் முதலுதவிப் பெட்டி இருப்பது பரிந்துரைக்கப்படுகிறது. அவசரநிலை ஏற்படும்போது அதிலுள்ள அடிப்படைப் பொருட்களைப் பயன்படுத்த முடியும் என்றார்.

எனினும், முதலுதவிப் பெட்டி வைத்திருப்பது மட்டும் போதாது என்றும், அதிலுள்ள உபகரணங்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்த அடிப்படை அறிவும் அவசியம் என்றும் ஹம்டான் வலியுறுத்தினார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.