சிலாங்கூரில் குடும்ப வருமானம் 10,726 ரிங்கிட்டிலிருந்து 14,500 ரிங்கிட்டாக அதிகரிக்கப்படும்

7 ஆகஸ்ட் 2026, 10:43 AM
சிலாங்கூரில் குடும்ப வருமானம் 10,726  ரிங்கிட்டிலிருந்து  14,500 ரிங்கிட்டாக அதிகரிக்கப்படும்

ஷா ஆலம், ஆகஸ்ட் 7 — சிலாங்கூர் மாநிலத்தில் குடும்பங்களின் சராசரி மாத வருமானத்தை 2030ஆம் ஆண்டுக்குள் RM14,500 ஆக உயர்த்த மாநில அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

சிலாங்கூர் இரண்டாவது திட்டத்தின்(RS-2) கீழ் இந்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மாநில மந்திரி பெசார் டத்தோ’ஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

தற்போது சிலாங்கூரில் குடும்பங்களின் சராசரி மாத வருமானம் RM10,726 ஆக உள்ள நிலையில், அதனை மேலும் உயர்த்தி மக்களின் பொருளாதார நிலையை வலுப்படுத்துவதே மாநில அரசின் நோக்கமாகும்.

சிலாங்கூர் மாநில சட்டமன்ற (DNS) கூட்டத்தில் RS-2 திட்டத்தை தாக்கல் செய்தபோது அமிருடின் இதனை குறிப்பிட்டார்

முதல் சிலாங்கூர் திட்டமான RS-1 இல் நிர்ணயிக்கப்பட்ட குடும்ப சராசரி வருமான இலக்கு வெற்றிகரமாக அடையப்பட்டுள்ளது. RS-1 இல் மாத குடும்ப வருமான இலக்காக RM9,290 நிர்ணயிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆனால் மலேசிய புள்ளிவிவரத் துறை வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி, சிலாங்கூரின் குடும்ப சராசரி மாத வருமானம் RM10,726 ஆக உயர்ந்துள்ளது. இது நிர்ணயிக்கப்பட்ட இலக்கை கிட்டத்தட்ட RM1,500 அதிகமாக கடந்துள்ளது,” என்று அவர் தெரிவித்தார்.

குடும்ப வருமானத்தை உயர்த்துவதுடன், 2030ஆம் ஆண்டுக்குள் வேலைஇல்லா நிலையை 2.2 சதவீதமாக குறைப்பதும், மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (KDNK) வளர்ச்சியை 6.1 சதவீதமாக உயர்த்துவதும் மாநில அரசின் பிற இலக்குகளாக உள்ளன என்றார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.