சிலாங்கூர் அரச குடும்பத்துடன் தொடர்பிருப்பதாகக் கூறுவோர் குறித்து அரண்மனை நிர்வாகம் எச்சரிக்கை

19 அக்டோபர் 2026, 7:24 AM
சிலாங்கூர் அரச குடும்பத்துடன் தொடர்பிருப்பதாகக் கூறுவோர் குறித்து அரண்மனை நிர்வாகம் எச்சரிக்கை

ஷா ஆலாம், அக். 19 – சிலாங்கூர் அரச குடும்பத்துடன் தொடர்பு அல்லது அந்தஸ்து கொண்டிருப்பதாகக் கூறும் எந்தவொரு நபருடனும் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு முன்னர், பொதுமக்கள் சிலாங்கூர் அரண்மனை நிர்வாகத்திடம் நேரடியாக உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

சிலாங்கூர் ராஜா மூடாவின் மெய்க்காப்பாளராகத் தன்னை அடையாளப்படுத்திக்கொண்டு, நிலம் மற்றும் சொகுசு கார்களின் விற்பனை நடவடிக்கைகள் மூலம் பொதுமக்களை ஏமாற்றியதாகச் சந்தேகிக்கப்படும் நபர் தொடர்பில் காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

அக்டோபர் 18ஆம் தேதி சிலாங்கூர் அரண்மனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சம்பந்தப்பட்ட நபர் அரச குடும்பத்துடன் தொடர்புடையவர் எனப் போலியாகக் கூறி, அதன் மூலம் தனிப்பட்ட ஆதாயம் பெற முயன்றதாகத் தெரிவிக்கப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பான விசாரணையை மலேசியக் காவல் துறையிடம் (PDRM) முழுமையாக ஒப்படைத்துள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விசாரணை விரிவாகவும் நியாயமாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் நடைபெறுவதை உறுதிசெய்ய காவல்துறை உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இந்தச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என விசாரணையில் கண்டறியப்படும் எந்தவொரு தரப்பினருக்கும் அரண்மனை நிர்வாகம் பாதுகாப்பு வழங்காது என்றும் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டது.

எனவே, அரச குடும்பத்துடன் தொடர்பிருப்பதாகக் கூறும் நபர்களின் அடையாளத்தையும் அதிகாரப்பூர்வ அந்தஸ்தையும் உறுதிப்படுத்தாமல், நிலம், சொகுசு வாகனங்கள் உள்ளிட்ட விற்பனை நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.