ஷா ஆலாம், செப். 21 — நாடு முழுவதும் மொத்தம் 21 பகுதிகளில் இன்று காலை 8 மணி நிலவரப்படி காற்று மாசுக் குறியீடு (API) அளவு ஆரோக்கியமற்ற நிலையில் பதிவாகியுள்ளது.
காற்று மாசுக் குறியீட்டு நிர்வாக முறைமையான APIMS வெளியிட்டுள்ள தரவுகளின்படி, சரவாக்கில் காற்றுத் தரம் மோசமடைந்த பகுதிகள் அதிகமாகப் பதிவாகியுள்ளன.
செரியான் மாவட்டக் காவல் தலைமையகம் (IPD Serian) பகுதியில் அதிகபட்சமாக 168 என்ற API அளவு பதிவானது. இதனைத் தொடர்ந்து காப்பிட் பகுதியில் 166, ஸ்ரீ அமான் 160 என்ற அளவுகளும் பதிவாகின.
மிரி, பிந்துலு மற்றும் கூச்சிங் ஆகிய பகுதிகளில் தலா 158, சமரஹான் பகுதியில் 157, சிபு 156, சமலாஜு 155, ILP மிரி 146 மற்றும் லிம்பாங் 104 என API பதிவாகியுள்ளது.
சபாவில், கோத்தா கினபாலுவில் உள்ள பாலிடெக்னிக் பகுதியில் API அளவு 153 ஆகப் பதிவான நிலையில், கோத்தா கினபாலுவில் 133-ஆக உள்ளது
இதனிடையே, தீபகற்ப மலேசியாவில் நெகிரி செம்பிலான் நீலாயில் அதிகபட்சமாக 158 என்ற API அளவு பதிவானது.
இதனைத் தொடர்ந்து புத்ராஜெயாவில் 157, கோலாலம்பூர் செராஸ் மற்றும் நெகிரி செம்பிலான் சிரம்பானில் தலா 155 என்ற API அளவும் பதிவாகியுள்ளது.
சிலாங்கூர் ஜோஹான் செத்தியாவில் 153, ஷா ஆலாம் மற்றும் மலாக்கா புக்கிட் ரம்பாய் பகுதிகளில் தலா 152 என API அளவு பதிவாகின. ஜோகூர், தங்காக்கில் API அளவு 125 ஆக உள்ளது.
மேற்கண்ட 21 பகுதிகளிலும் API அளவு 101 முதல் 200 வரையிலான வரம்பில் இருப்பதால், அவை ஆரோக்கியமற்ற காற்றுத் தரம் கொண்ட பகுதிகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.





