ஷா ஆலாம், செப் 20 : சிலாங்கூர், கோலாலம்பூர், புத்ராஜெயா மற்றும் பல மாநிலங்களில் இன்று மாலை 6 மணி வரை இடியுடன் கூடிய பலத்த மழையுடன் பலத்த காற்றும் வீசக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
மலேசிய வானிலை ஆய்வு மையம் பிற்பகல் 3:05 மணிக்கு வெளியிட்ட இந்த எச்சரிக்கை, சிலாங்கூர் மாநிலம் முழுவதையும், கிளந்தான் மற்றும் திரெங்கானு மாநிலங்களையும் உள்ளடக்கியுள்ளது.
மேலும், இதனால் பாதிக்கப்படக்கூடிய பிற மாநிலங்களின் பகுதிகள்: பேராக்: செலாமா, லாருட் மாடாங், ஹுலு பேராக், கோலா கங்சார், மஞ்சோங், பேராக் தெங்கா, கிந்தா, கம்பார், பாடாங் பெடாங், முவாலிம், ஹிலிர் பேராக் மற்றும் பாகன் டத்தோ.
பகாங்: ஜெராண்டுட், லிபிஸ், கேமரன் மலை , ரவுப், பெந்தோங், தெமர்லோ, பேரா மற்றும் குவாந்தான்.
நெகிரி செம்பிலான்: ஜெலுபு, ஜெம்போல், கோலா பிலா, தம்பின், சிரம்பான் மற்றும் ரெம்பாவ்.
ஜொகூர்: செகாமட், மூவார், குளுவாங், பத்து பகாட், பொந்தியான், குலாய், ஜொகூர் பாரு மற்றும் கோத்தா திங்கி.
சரவாக்: ஸ்ரீ அமான், லிம்பாங், மாருடி, மிரி, செபாவ், பிந்துலு, பாவ், கூச்சிங், செரியான் மற்றும் சமரஹான்.
சபா: சிபித்தாங், தெனோம், சூக், பியூஃபோர்ட், ரானாவ், கோத்தா பெலுட், துவாரன் மற்றும் கோத்தா கினபாலு.







