நஜீப் வீட்டுக் காவல் நடைமுறை விபரங்களை சிறைச்சாலை துறை வெளியிடும்

19 செப்டெம்பர் 2026, 9:01 AM
நஜீப் வீட்டுக் காவல்  நடைமுறை விபரங்களை சிறைச்சாலை துறை வெளியிடும்

ஷா ஆலாம், செப் 19 - முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக்கின் வீட்டுக் காவல் தொடர்பான SOP-நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகளை சிறைச்சாலை துறை விரைவில் வெளியிடும்.

சந்திப்பு, கட்டுப்பாடு, நடமாட்டக் கண்காணிப்பு உட்பட சில விவகாரங்கள் அந்த SOP வரையறுத்திருக்குமென , தேசிய சட்டத் துறை தலைவர் டான் ஸ்ரீ மொஹமட் டுசுக்கி மொக்தார் தெரிவித்தார்.

தேசிய சட்டத் துறை தலைவர் டான் ஸ்ரீ மொஹமட் டுசுக்கி மொக்தார் படம் : பெர்னாமா

வீட்டுக் காவல நடைமுறையைத் தொடங்குவதற்கு முன்னர் நஜீப், முதலில் கோலாலம்பூர் உயர் நீதிமன்ற பதிவாளர் அலுவலகத்தில் 5 கோடி ரிங்கிட் அபராதத்தைச் செலுத்த வேண்டுமென அவர் கூறினார்.

நஜீப் தமது எஞ்சிய சிறை தண்டனையை 2028 ஆகஸ்ட் 23 ஆம் தேதி வரையில் வீட்டுக் காவலில் இருந்து அனுபவிக்க, நேற்று பேரரசர் நிபந்தனையுடன் கூடிய பொது மன்னிப்பை வழங்கியிருந்தார்.

73 வயதான நஜீப், எஸ்.ஆர்.சி நிதி மோசடி வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, கடந்த 2022 ஆகஸ்ட் 23-ஆம் தேதியிலிருந்து காஜாங் சிறையில் இருந்து வருகிறார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.