கடும் புகை மூட்டம் : கோலாலம்பூர், புத்ராஜெயா, சிலாங்கூரில் செயற்கை மழைப் பொழிவிக்க நடவடிக்கை

19 செப்டெம்பர் 2026, 6:00 AM
கடும் புகை மூட்டம் :  கோலாலம்பூர், புத்ராஜெயா, சிலாங்கூரில் செயற்கை மழைப் பொழிவிக்க நடவடிக்கை
கடும் புகை மூட்டம் :  கோலாலம்பூர், புத்ராஜெயா, சிலாங்கூரில் செயற்கை மழைப் பொழிவிக்க நடவடிக்கை

கோலாலம்பூர், செப் 19 - கோலாலம்பூர், புத்ராஜெயா, சிலாங்கூர் ஆகிய பகுதிகளில் புகை மூட்டப் பாதிப்பினைக் குறைப்பதற்காக, இன்றும் நாளையும் செயற்கை மழைப் பொழிவிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவிருக்கின்றன.

மலேசிய வானிலை ஆய்வு மையம், மலேசிய பொது வான் அதிகாரத்துவ தரப்பு, அரச மலேசிய வான் படை ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் நட்மா (Nadma) தேசியப் பேரிடர் நிர்வாக மையம் அந்நடவடிக்கையை மேற்கொள்ளவிருக்கின்றது.

நுண் துகள் மாசு அளவீடான PM2.5 அளவீடு, பாதிக்கப்பட்ட பகுதிகளில் 24 மணி நேரத்திற்கும் மேல் 150-க்கும் மேலாக பதிவானதை அடுத்து, அந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நட்மாவின் தலைமை இயக்குநர் டத்தோ மியோர் இஸ்மாயில் மியோர் அகிம் தெரிவித்தார்.

மாநிலச் சுற்றுச்சூழல் துறையின் காற்று மாசடைவு குறியீட்டு நிர்வகிப்பு அமைப்பின் (APIMS) தரவுகளின்படி, இன்று மதியம் 1 மணி நிலவரப்படி, புத்ராஜெயா, கோலாலம்பூர் , சிலாங்கூர் ஆகிய பகுதிகளில் உள்ள காற்றுத் தரக் கண்காணிப்பு நிலையங்கள் உட்பட மொத்தம் 17 நிலையங்களில் ஆரோக்கியமற்ற காற்றுத் தரம் (API) பதிவாகியுள்ளது.

சிலாங்கூர், ஷா ஆலாமில் காற்று மாசு குறியீடு 154-ஆகவும் (மாநிலத்திலேயே மிக அதிகம்), கோலாலம்பூர், செராஸ்-சில் 139 -ஆகவும் ,பத்து மூடாவில் 124-ஆகவும், புத்ராஜெயாவில் 111-ஆகவும் பதிவாகியுள்ளது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.