மலேசியாவின் மிக உயர்ந்த காற்று மாசுக் குறியீடு (API) பதிவான இடங்களில் ஒன்றாக ஷா ஆலம் உள்ளது

19 செப்டெம்பர் 2026, 3:41 AM
மலேசியாவின் மிக உயர்ந்த காற்று மாசுக் குறியீடு (API) பதிவான இடங்களில் ஒன்றாக ஷா ஆலம் உள்ளது

ஷா ஆலம், செப் 19 : இன்று காலை 11 மணி நிலவரப்படி, நாட்டின் மிக உயர்ந்த காற்று மாசுக் குறியீடு (API) பதிவான இடங்களில் ஒன்றாக ஷா ஆலம் திகழ்கிறது.

அதே வேளையில், சிலாங்கூரின் மற்ற இரு பகுதிகளிலும் ஆரோக்கியமற்ற காற்றுத் தரம் பதிவாகியுள்ளது.

காற்று மாசுக் குறியீடு நிர்வகிப்பு அமைப்பின் (APIMS) வலைத்தளத்தின்படி, ஷா ஆலாமில் காற்று மாசுக் குறியீடு 156 ஆகப் பதிவாகியுள்ளது.

அதே சமயம் ஜோஹான் செத்தியா மற்றும் பெட்டாலிங் ஜெயாவில் முறையே 118 மற்றும் 109 ஆகப் பதிவாகியுள்ளது.

சிலாங்கூரின் பிற மூன்று பகுதிகளில் காற்றுத் தரம் மிதமான அளவில் இருந்தது. அவை கிள்ளான் (92), கோலா சிலாங்கூர் (86) மற்றும் பந்திங் (81) ஆகும்.

நாடு தழுவிய அளவில், 20 பகுதிகள் ஆரோக்கியமற்ற காற்று மாசுக் குறியீட்டைக் கொண்டிருந்தன.

இதில் சரவாக்கில் உள்ள செரியன் பகுதி 171 என்ற மிக உயர்ந்த குறியீட்டைப் பதிவு செய்ததது.

அதைத் தொடர்ந்து சரவாக்கின் கூச்சிங் (170), ஸ்ரீ அமான் (164), பேராக்கின் ஸ்ரீ மஞ்சோங் (163) மற்றும் சரவாக்கின் சமரஹான் (163) ஆகிய பகுதிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

கோலாலம்பூர், புத்ராஜெயா, நெகிரி செம்பிலான், ஜொகூர், மலாக்கா மற்றும் சபா ஆகிய மாநிலங்களில் உள்ள மேலும் சில நகரங்களிலும் ஆரோக்கியமற்ற காற்று மாசுக் குறியீடு பதிவாகியுள்ளது.

நாடு முழுவதும் மொத்தம் 37 பகுதிகளில் மிதமான காற்றுத் தரமும், 10 பகுதிகளில் நல்ல காற்று மாசுக் குறியீடும் பதிவாகியிருந்தன.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.