புகை மூட்டம் : மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துங்கள்-பிரதமர் வேண்டுகோள்

18 செப்டெம்பர் 2026, 3:41 PM
புகை மூட்டம் : மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துங்கள்-பிரதமர் வேண்டுகோள்

கோலாலம்பூர், செப் 18 : நாட்டில் நாளுக்கு நாள் கவலை அளிக்கும் வகையில் அதிகரித்து வரும் புகைமூட்டப் பிரச்சினையை எதிர்கொள்ள, பொதுமக்கள் தங்களின் பங்களிப்பாக, மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டார்.

அனைவரின் நலனையும் கருத்தில் கொண்டு அரசாங்கம் இதற்கான தீர்வுகளைத் தொடர்ந்து தேடி வருவதாக அன்வார் தமது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

பல பகுதிகளில் புகைமூட்டப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

காற்று மாசுபாட்டால் ஏற்படும் சுகாதார அபாயங்களைக் குறைக்கத் தகுந்த நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.