ஷா ஆலாம், செப் 18 — காற்றின் தூய்மைக்கேட்டுக் குறியீட்டு (APIMS) இணையத் தளத்தின்படி, இரவு 10 மணி நிலவரப்படி மலேசியாவின் மிக மோசமான காற்றின் தூய்மைக்கேட்டுக் குறியீடு (API) பதிவாகியுள்ள இடமாக சிலாங்கூரின் ஜோஹான் செத்தியா (173) உள்ளது.
இதற்கு அடுத்தபடியாக பேராக்கின் ஸ்ரீ மஞ்சோங் (170) மற்றும் சரவாக்கின் கூச்சிங் (170) ஆகிய இடங்கள் உள்ளன.
சிலாங்கூரில் உள்ள மேலும் நான்கு பகுதிகள் ஆரோக்கியமற்ற காற்றுத் தூய்மைக் கேட்டுக் குறியீட்டு (API) அளவைக் கொண்டுள்ளன.
அவை, ஷா ஆலாம் (165)பெட்டாலிங் ஜெயா (158)கிள்ளான் (154)பந்திங் (154). இந்த நகரங்கள் நாடு தழுவிய அளவில் ஆரோக்கியமற்ற காற்றின் தரத்தைக் கொண்டுள்ள 31 பகுதிகளில் அடங்கும்.
மேலும் 34 பகுதிகளில் மிதமான காற்றின் தரம் பதிவாகியுள்ளது.
அதே வேளையில், வெறும் மூன்று பகுதிகள் மட்டுமே நல்ல காற்றுத் தூய்மைக் கேட்டு அளவைப் பெற்றுள்ளன.
அவை, சபாவின் சண்டாக்கான் (47)பெர்லிஸின் கங்கார் (33) கெடாவின் லங்காவி (21) .







