ஷா ஆலம், செப்.18: ஷா ஆலாம் மாநகராட்சி (MBSA) மேற்கொண்ட அமலாக்க நடவடிக்கையில், தடை செய்யப்பட்ட பகுதிகளில் நிறுத்தப்பட்டிருந்த ஆறு டிரெய்லர்கள் இழுத்துச் செல்லப்பட்டன.
இந்த நடவடிக்கை கடந்த புதன்கிழமை, ஜாலான் பெர்சியாரான் செப்பாங், செக்ஷன் 27 மற்றும் செக்ஷன் 28 ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டது.
கனரக வாகனங்களை அனுமதிக்கப்படாத இடங்களில் நிறுத்தும் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைப்பதுடன், சட்ட விதிமுறைகளுக்கு இணங்குவதை உறுதி செய்வதே இந்த அமலாக்க நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும்.

இந்நடவடிக்கையில் எம்பிஎஸ்ஏவுடன் காவல்துறை மற்றும் சாலைப் போக்குவரத்துத் துறை, JPJ ஆகியவையும் இணைந்து செயல்பட்டன.
அமலாக்க நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும். கனரக வாகனங்களின் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளை எப்போதும் கடைப்பிடிக்க வேண்டும் என மாநகராட்சி மன்றம் அறிவுறுத்தியுள்ளது.
குறிப்பாக, தடை செய்யப்பட்ட பகுதிகளில் கனரக வாகனங்களை நிறுத்துவதைத் தவிர்க்குமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போது பல்வேறு விதிமீறல்களுக்காக JPJ அதிகாரிகள் எட்டு அபராத நோட்டீஸ்களை வெளியிட்டனர். காவல்துறையினரும் ஐந்து அபராதங்களை விதித்துள்ளனர்.







