புகைமூட்டம்: சிலாங்கூரில் 6 இடங்களில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலை

18 செப்டெம்பர் 2026, 1:19 AM
புகைமூட்டம்: சிலாங்கூரில் 6 இடங்களில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலை

ஷா ஆலம், செப்.18: இன்று காலை 7 மணி நிலவரப்படி, நாட்டில் 31 பகுதிகளில் காற்றுத் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் பதிவாகியுள்ளது.

சிலாங்கூரில் மட்டும் ஆறு பகுதிகளில் காற்று மாசு குறியீடு ஆரோக்கியமற்ற அளவை எட்டியுள்ளது. அவற்றில் ஜோஹான் செத்தியா பகுதியில் 198 API பதிவாகி, மாநிலத்திலேயே அதிகபட்ச அளவாக உள்ளது.

அதனை தொடர்ந்து ஷா ஆலம் 170, பந்திங் 166, பெட்டாலிங் ஜெயா 162, கிள்ளான் 161, கோலா சிலாங்கூர் 141 API-யை பதிவுசெய்துள்ளன.

புத்ராஜெயாவில் காற்று மாசு குறியீடு 171-ஆக உள்ள நிலையில் கோலாலம்பூரில் செராஸ் 165, பத்து மூடா 162 என API அளவை எட்டியுள்ளன.

பேராக், நெகிரி செம்பிலான், மலாக்கா, ஜோகூர், பகாங் மற்றும் சரவாக் ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளிலும் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் பதிவாகியுள்ளன.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.