ஷா ஆலாம், செப்.15: சிலாங்கூரில் ஆறு பகுதிகளில் இன்று காலை 10 மணியளவில் காற்று மாசு குறியீடு (API) ஆரோக்கியமற்ற நிலையில் பதிவாகியுள்ளது.
ஷா ஆலாமில் API 168-ஆகப் பதிவாகியுள்ளது. அதேவேளை, பெட்டாலிங் ஜெயா மற்றும் கிள்ளானில் தலா 161 , கோலா சிலாங்கூர் மற்றும் பந்திங்கில் தலா 157-ஆக API பதிவாகியுள்ளன.
நாடு முழுவதும் அதிகபட்ச API அளவாக சரவாக்கின் செரியான், சிலாங்கூரின் ஜொஹான் செத்தியா ஆகிய இரு பகுதிகளிலும் 182 பதிவாகின.
இதனிடையே, புத்ராஜெயா, பேராக், பகாங் மற்றும் மலாக்கா மாநிலங்களின் சில பகுதிகளிலும் காற்றுத் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் உள்ளது.
நாடு முழுவதும் 38 பகுதிகளில் காற்றுத் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் காணப்பட்டதுடன், மேலும் 30 பகுதிகளில் மிதமான காற்றுத் தரம் பதிவாகியுள்ளது.







