புகைமூட்டம்: சிலாங்கூரில் 6 இடங்களில் காற்று மாசு ஆரோக்கியமற்ற நிலை

15 செப்டெம்பர் 2026, 10:00 AM
புகைமூட்டம்: சிலாங்கூரில் 6 இடங்களில் காற்று மாசு ஆரோக்கியமற்ற நிலை

ஷா ஆலாம், செப்.15 — இன்று மாலை 4 மணியளவில் சிலாங்கூரில் ஆறு பகுதிகளில் காற்று மாசு குறியீடு (API) ஆரோக்கியமற்ற நிலையில் பதிவாகியுள்ளது.

அவற்றில், ஜோஹான் செத்தியாவில் API அளவு 188 ஆகப் பதிவாகி, நாட்டில் அதிகபட்ச காற்று மாசு குறியீட்டைக் கொண்ட பகுதியாக மாறியுள்ளது.

ஷா ஆலாமில் 173 ஆகவும், கிள்ளானில் 167 ஆகவும், பெட்டாலிங் ஜெயாவில் 166 ஆகவும், பந்திங்கில் 164 ஆகவும், கோலா சிலாங்கூரில் 163 ஆகவும் API பதிவாகியுள்ளன.

இதனிடையே, மலேசியா முழுவதும் 30 பகுதிகளில் காற்றுத் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் பதிவாகியுள்ளதுடன், 29 பகுதிகளில் மிதமான அளவிலான காற்றுத் தரம் உள்ளது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.