ஷா ஆலாம், செப்.13 – நாட்டின் இரு மாநிலங்களில் உள்ள ஐந்து பகுதிகளில் 'ஆரோக்கியமற்ற' காற்று மாசு குறியீடு (API) அளவு பதிவாகியுள்ளது.
சிலாங்கூர் மாநிலத்தின் ஜோஹான் செத்தியாவில் API 148-ஆக பதிவாகியுள்ளது. இது இன்று காலை 9 மணிக்கு இருந்த அளவை (95) விடக் குறிப்பிடத்தக்க அதிகரிப்பாகும்.
இதற்கிடையில், சரவாக்கின் செரியான் பகுதியில் அதிகபட்சமாக 183 API பதிவாகியுள்ளது. அடுத்தடுத்த இடங்களில் ஸ்ரீ அமான் (170), சமரஹான் (156) மற்றும் கூச்சிங் (155) ஆகிய பகுதிகள் உள்ளன.
நாட்டில் மொத்தம் 54 பகுதிகளில் காற்றுத் தரம் ஆரோக்கியமானதாகப் பதிவாகியுள்ளது; அதேவேளையில், எந்தப் பகுதியிலும் 'மிகவும் ஆரோக்கியமற்ற' நிலை பதிவாகவில்லை.







