புதிய மைகார்ட் அரசாங்க உதவிகளைப் பாதிக்காது

17 செப்டெம்பர் 2026, 7:08 AM
புதிய மைகார்ட்  அரசாங்க உதவிகளைப் பாதிக்காது
புதிய மைகார்ட்  அரசாங்க உதவிகளைப் பாதிக்காது

புத்ராஜெயா, செப் 19 - புதிய தலைமுறை மைகார்ட் அடையாள அட்டை, அரசாங்கத்தின் உதவிகளைப் பெறுவதைப் பாதிக்காது .

அரசாங்க உதவிகள் அல்லது உதவித் தொகையைப் பெறுவதற்கு , மலேசியர்களின் அந்த அடையாள அட்டை 'உறுதிப்படுத்தும்' ஓர் ஆவணமாக செயல்படுமென , தேசிய பதிவுத் துறை தெரிவித்தது.

மக்களுக்கான உதவிகளும் சேவைகளும் தொடர்ச்சியாக கிடைக்கப் பெறுவதை உறுதிச் செய்ய, தேசியப் பதிவுத் துறை தொடர்ந்து , சார்புடைய அனைத்து அமைச்சுகளுடனும் , அமைப்புகளுடனும் என்றும் ஒத்துழைத்து வருவதாக , அத்துறை இன்று ஓர் அறிக்கையின் வாயிலாகத் தெரிவித்தது.

" புதிய மைகார்ட் அட்டையை எடுக்கும்போது, சாரா ( SARA) உதவித் தொகையின் மீதம் அல்லது உதவிக்கான தகுதியை இழந்து விடுவோமென அஞ்ச வேண்டாம்.

உதவித் தொகையின் மீதமும் தகுதியும் அடையாள அட்டையில் பதிவு செய்து வைக்கப்படுவதில்லை. அவை சாரா முறையில் பதிவுச் செய்யப்படுகிறது.

எனவே, புதிய மைகார்டைக் கொண்டு எப்போதும் போல், மக்கள் கடைகளில் பொருட்களை உதவித் தொகையில் வாங்கலாம்" என தேசிய பதிவுத் துறையின் அடையாள அட்டைப் பிரிவுக்கான இயக்குநர் முஹம்மட் அஸ்ராஃப் சுகாடி தெரிவித்தார்.

தற்போது தாங்கள் வைத்திருக்கும் மைகார்ட் சேதமடையவில்லை என்றால், பொது மக்கள் உடனடியாக புதிய மைகார்ட் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கத் தேவையில்லை.

எனினும், பிளாஸ்டிக் அடையாள அட்டை, உயர் தர அடையாள அட்டை மற்றும் மறை உருவம் இல்லாத (ghost image) அடையாள அட்டை வைத்திருப்பவர்கள், புதிய தலைமுறை அடையாள அட்டைக்குக் கட்டாயம் மாற வேண்டும்.

இன்று முதல் , நாடு முழுவதுமுள்ள தேசியப் பதிவுத் துறையின் 40 கிளை அலுவலகங்களில் புதிய மைகார்ட் அட்டை அச்சிடப்பட்டு வெளியிடப்படும்.

அச்சிடும் வசதி இல்லாத அலுவலகங்களில் , விண்ணப்பித்து ஐந்து நாள் வேலை நாட்களில் புதிய அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்ளலாம்.

புதிய தலைமுறை அடையாள அட்டை, அமலாக்க கியூ.ஆர் (QR ) குறியீடு , பாதுகாப்பு ஹோலோகிராம் உட்பட பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை உள்ளடக்கியுள்ளது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.