நல்லுறவை வலுப்படுத்தும் சமூக அளவிலான விளையாட்டு நடவடிக்கைகள்

16 செப்டெம்பர் 2026, 10:00 AM
நல்லுறவை வலுப்படுத்தும் சமூக அளவிலான விளையாட்டு நடவடிக்கைகள்

ஷா ஆலம், செப்.16 – ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிப்பதுடன், குடியிருப்பாளர்களிடையே நல்லுறவை வலுப்படுத்த சமூக அளவிலான விளையாட்டு நடவடிக்கைகள் தொடர்ந்து வலுப்படுத்தப்பட வேண்டும்.

இதனைப் பந்திங் சட்டமன்ற உறுப்பினர் வீ.பாப்பாராய்டு வலியுறுத்தினார்.

இத்தகைய விளையாட்டு நிகழ்ச்சிகள் மூலம் திறமைகளை அடையாளம் காணவும், விளையாட்டு உணர்வை வளர்க்கவும், பல்வேறு பின்னணிகளைச் சேர்ந்த மக்கள் ஒன்றிணைந்து செயல்படுவதற்கான வாய்ப்பையும் ஏற்படுத்த முடியும் என அவர் தெரிவித்தார்.

இதுபோன்ற நிகழ்ச்சிகள் சமூக உறவுகளை வலுப்படுத்துவதற்கும், குழு ஒத்துழைப்பு உணர்வை வளர்ப்பதற்கும் ஒரு தளமாக அமைவதாக அவர் கூறினார்.

மலேசிய தினத்தின் உணர்வை தேசியக் கொடியை ஏற்றுவதன் மூலமும் கொண்டாட்டங்களின் வழியாகவும் மட்டுமே வெளிப்படுத்தாமல், ஒற்றுமையான சமூகத்தை உருவாக்குதல், ஒருவரையொருவர் மதித்தல் மற்றும் சமூக நடவடிக்கைகளில் ஒன்றிணைந்து செயல்படுதல் ஆகியவற்றின் மூலமும் வெளிப்படுத்த வேண்டும் என பாப்பாராய்டு குறிப்பிட்டார்.

இதுபோன்ற சமூக நிகழ்ச்சிகள் தொடர்ந்து ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிப்பதற்கும், குடியிருப்பாளர்கள் மற்றும் உள்ளூர் தலைமைத்துவத்துக்கு இடையிலான உறவை மேலும் வலுப்படுத்துவதற்கும் சிறந்த வாய்ப்பாக அமையும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.