ஷா ஆலம், 16 செப்டம்பர் – 16 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான செலவில் மேற்கொள்ளப்படும் ஶ்ரீ கெம்பாங்கான் பொதுச் சந்தையின் மறுகட்டுமானப் பணிகள் இம்மாதம் தொடங்கியுள்ளன.
இத்திட்டம் செப்டம்பர் மாதம் தொடங்கியுள்ளதுடன் இரண்டு ஆண்டுகளுக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உள்ளூர் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு மிகவும் வசதியான சந்தை வளாகத்தை உருவாக்கும் நோக்கில் இத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக ஶ்ரீ கெம்பாங்கான் சட்டமன்ற உறுப்பினர் வோங் சியூ கீ தெரிவித்தார்.
சந்தையின் கட்டுமானப் பணிகள் திட்டமிட்டபடி சிறப்பாக நிறைவேற்றப்பட்டு, ஶ்ரீ கெம்பாங்கான் மக்களுக்கு மிகவும் வசதியான ஒரு சந்தையாக அது அமையும் என அவர் தெரிவித்தார்.

புதிய சந்தை உருவாகும் வரை இந்தத் திட்டத்தின் முன்னேற்றத்தை அனைவரும் ஒன்றிணைந்து கண்காணிக்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.







