KLIA-இல் e-hailing வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் இனி RM2 மட்டுமே

16 செப்டெம்பர் 2026, 7:35 AM
KLIA-இல் e-hailing வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் இனி RM2 மட்டுமே

கோலாலம்பூர், செப். 16: கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் (KLIA) மின்-வாடகை வாகனங்கள் (e-hailing) நுழைய இன்று முதல் வரியுடன் சேர்த்து RM2 மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும்.

இது முனையம் 1 மற்றும் முனையம் 2 ஆகிய இரண்டிற்கும் பொருந்தும்.

புதிய கட்டணம் முனையம் 1-ல் இதுவரை வசூலிக்கப்பட்ட RM3-ஐயும், முனையம் 2-ல் வசூலிக்கப்பட்ட RM2.16-ஐயும் காட்டிலும் குறைவானது என Malaysia Airports Holdings Bhd (MAHB) தெரிவித்துள்ளது.

KLIA முனையம் 1-ல் பயணிகள் ஏற்றும் வசதிகளை மேம்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக கடந்த ஆகஸ்ட் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட மின்-வாடகை வசதிகள் செயல்பாட்டுத் திறனில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைப் பதிவு செய்துள்ளதாக MAHB தெரிவித்தது.

ஒரு மாதத்திலேயே, ஒதுக்கப்பட்ட 10 நிமிட சலுகை நேரத்துக்குள் பயணிகளை ஏற்றி வெளியேறும் மின்-வாடகை ஓட்டுநர்களின் விகிதம் 49.4 விழுக்காட்டிலிருந்து 99.3 விழுக்காடாக உயர்ந்துள்ளதாக அது குறிப்பிட்டது.

அதேவேளை, பயணிகளை ஏற்றும் பாதைகளுக்குள் தினசரி நுழையும் வாகனங்களின் எண்ணிக்கையும் 8,124-லிருந்து 7,024 ஆக, 13.5 விழுக்காடு குறைந்துள்ளது.

இதன் மூலம் பயணிகள் அதிகமாக வரும் நேரங்களில் வாகனங்கள் விரைவாக வெளியேறுவதுடன், பயணிகளை ஏற்றும் நடவடிக்கைகளும் மேலும் சீராக நடைபெறுகின்றன

மேம்படுத்தப்பட்ட மின்-வாடகை அமைப்பின் மூலம் வாகனங்களின் நுழைவு மற்றும் செயல்பாடுகளை மேலும் கடுமையாகக் கண்காணித்து கட்டுப்படுத்தவும் முடியும்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.