ஷா ஆலாம், செப்.16: கடந்த சனிக்கிழமை, புத்ராஜெயாவில் 'பிரசின்க்ட் 5' (Precinct 5) பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து விழுந்து இளம்பெண் ஒருவர் உயிரிழந்தார்.
அப்பெண்ணின் மரணத்தில் எந்தவிதமான குற்றச் செயலும் இல்லை என போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
சந்தேகத்திற்கிடமான செயல் அல்லது குற்றச் செயல் நடந்ததற்கான எந்த ஆதாரமும் விசாரணயில் கிடைக்கவில்லை என புத்ராஜெயா மாவட்டக் காவல் துறைத் தலைவர் உதவி ஆணையர் ஐடி ஷாம் முகமட் தெரிவித்தார்.
இவ்வழக்கு 'திடீர் மரணம்' (SDR) என வகைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.






