ஷா ஆலாம், செப்டம்பர் 13: மலேசிய அரச போலீஸ் படையான பி.டி.ஆர்.எம்.-இல் காலியாகியுள்ள தேசிய போலீஸ் துணை தலைவர் பதவிக்கு 28 போலீஸ் கமிஷனர் அதிகாரிகள் பரிசீலிக்கப்படவுள்ளனர்.
இதனை உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைஃபுடின் நசுதியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
முன்னாள் தேசிய போலீஸ் துணை தலைவர் துன் ஆயோப் கான் மைடின் பிச்சாயின் ஓய்வைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள இந்தப் பதவி வெற்றிடத்துக்கான புதிய நியமனச் செயல்முறை தொடங்கப்பட்டுள்ளது.
பரிந்துரைக்கப்படும் வேட்பாளர்களின் பெயர்கள், மாமன்னர் சுல்தான் இப்ராஹிமின் ஒப்புதலைப் பெறுவதற்காக சமர்ப்பிக்கப்படும் என சைஃபுடின் நசுதியோன் விளக்கினார்.
இந்த நியமனச் செயல்முறை வெகு விரைவில் நிறைவடையும். சம்பந்தப்பட்ட அனைத்து நடைமுறைகளும் முழுமையாக முடிக்கப்பட்ட பின்னர் புதிய தேசிய போலீஸ் துணை தலைவர் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் என அவர் கூறினார்.
அனைத்து நடைமுறைகளும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், புதிய தேசிய போலீஸ் துணை தலைவர் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.






