ஷா ஆலாம், செப்.16 — புகைமூட்டம் அடுத்த மாதம் வரை நீடிக்கக்கூடும் என்பதால், பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக முகக்கவசங்கள் வழங்கப்படும்.
இதனை சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்துள்ளார்
மாணவர்களின் நலனைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அவர் கூறினார்.

வானிலை ஆய்வுத் துறை (MetMalaysia) உட்பட சம்பந்தப்பட்ட சில தரப்பினரை விரைவில் அழைத்து கலந்துரையாடலும் நடத்தப்படும் என்றார் அமிருடின்.
இதற்கிடையே, சிலாங்கூர் இஸ்லாமிய சமயத் துறை (JAIS) நிர்வகிக்கும் சமய ஆரம்பப் பள்ளி மதிப்பீட்டுத் தேர்வான PSRA தேர்வும், புகைமூட்டம் மோசமடைந்தால் ஒத்திவைக்கப்படலாம்.
API அளவு 200-ஐ எட்டினால் பள்ளிகளை மூடப்படும். அது 300-ஐ எட்டினால் அவசரநிலையை அறிவிக்கக் கோருவோம் என்றார் அவர்.
அதிக API அளவு பதிவாகும் பகுதிகளில் முகக்கவசங்களை இலவசமாக விநியோகிக்க மாநில அரசாங்கம் தயாராக இருப்பதாக முன்னதாக மாநில சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.







