சிலாங்கூரில் 5 பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் பதிவு

26 ஆகஸ்ட் 2026, 1:09 AM
சிலாங்கூரில் 5 பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் பதிவு

ஷா ஆலாம், ஆகஸ்ட் 26: இன்று காலை சிலாங்கூரில் ஐந்து பகுதிகளில் காற்றுத் தரக் குறியீடு (IPU) ஆரோக்கியமற்ற நிலையில் பதிவாகியுள்ளன.

ஜோஹான் செத்தியா பகுதியில் IPU அளவு 161 ஆகப் பதிவாகி, சிலாங்கூரில் அதிகபட்ச மாசு அளவு கொண்ட பகுதியாக உள்ளது என மலேசிய காற்றுத் தரக் குறியீட்டு மேலாண்மை அமைப்பு (APIMS) குறிப்பிட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து ஷா ஆலாமில் 158 ஆகவும், பந்திங்கில் 151 ஆகவும், கிள்ளானில் 135 ஆகவும், பெட்டாலிங் ஜெயாவில் 112 ஆகவும் IPU பதிவாகியுள்ளது.

இந்த அனைத்து பகுதிகளிலும் பதிவான IPU அளவுகள் 101 முதல் 200 வரையிலான ‘ஆரோக்கியமற்ற’ பிரிவில் இடம்பெறுகின்றன. இத்தகைய காற்று மாசு நிலை, குழந்தைகள், முதியவர்கள் மற்றும் சுவாசப் பிரச்சனைகள் உள்ளவர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.

இதனிடையே, சரவாக்கின் செரியான் பகுதியில் IPU 170ஆக பதிவாகியுள்ளது. அதற்கு அடுத்ததாக சரவாக்கின் ஸ்ரீ அமான் பகுதியில் 169 ஆகவும், நெகிரி செம்பிலானின் நிலாய் பகுதியில் 162 ஆகவும் காற்றின் மாசு அளவு பதிவாகியுள்ளது.

மேலும், சரவாக்கின் சமரஹான் பகுதியில் IPU 161 ஆகவும், புத்ராஜெயாவில் 159 ஆகவும் பதிவாகியுள்ள நிலையில் சிரம்பான் பகுதியில் 158, செராஸ் பகுதியில் 155, மலாக்காவின் புக்கிட் ரம்பாய் மற்றும் தங்காக் பகுதிகளில் தலா 153 என்ற அளவிலும் IPU பதிவாகியுள்ளது.

இதற்கிடையில், அலோர் காஜா பகுதியில் 152 ஆகவும், கோலாலம்பூரின் பத்து மூடா பகுதியில் 151 ஆகவும் IPU பதிவாகியுள்ளது. தைப்பிங் மற்றும் கூச்சிங் பகுதிகளில் தலா 134 என்ற அளவிலும் காற்றுத் தரக் குறியீடு பதிவாகியுள்ளது.

எனவே, காற்று மாசு அளவு அதிகமாக உள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், வெளிப்புற நடவடிக்கைகளை கட்டுப்படுத்தி, தற்போதைய காற்றுத் தர நிலவரத்தை தொடர்ந்து கண்காணிப்பது அவசியமாகும்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.