சிலாங்கூரில் 5 பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் பதிவு

29 ஆகஸ்ட் 2026, 10:29 AM
சிலாங்கூரில் 5 பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் பதிவு

ஷா ஆலம், ஆக. 29: இன்று மாலை 4 மணி நிலவரப்படி சிலாங்கூரில் ஐந்து பகுதிகளில் காற்று மாசு குறியீடு (API) ஆரோக்கியமற்ற நிலையில் பதிவாகியுள்ளன.

அதில் ஷா ஆலாமில் அதிகபட்சமாக 157 என API அளவு பதிவாகியுள்ளது.

ஜோஹான் செத்தியாவில் 155, பெட்டாலிங் ஜெயாவில் 152, கோலா சிலாங்கூரில் 121 மற்றும் கிள்ளானில் 120 என்ற API அளவுகள் பதிவாகியுள்ளன.

இதனிடையே, நாட்டிலேயே காற்றுத் தரம் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட மாநிலமாக சரவாக் தொடர்ந்து விளங்குகிறது.

சிலாங்கூர் மற்றும் சரவாக் தவிர, கெடா, பேராக், நெகிரி செம்பிலான், ஜோகூர், கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயா ஆகிய இடங்களிலும் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் பதிவாகியுள்ளது.

நாடு முழுவதும் மேலும் 36 பகுதிகளில் மிதமான காற்றுத் தரம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.