சிலாங்கூரின் 3 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை

13 செப்டெம்பர் 2026, 9:21 AM
சிலாங்கூரின் 3 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை
சிலாங்கூரின் 3 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை

ஷா ஆலாம், செப்.13 — சிலாங்கூரின் மூன்று மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என மலேசிய வானிலை ஆய்வுத் துறை (MetMalaysia) எச்சரிக்கை விடுத்துள்ளது.

உலு சிலாங்கூர், கோம்பாக் மற்றும் உலு லங்காட் ஆகிய மாவட்டங்கள் பாதிக்கப்படும் பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதனிடையே, கெடா, பேராக், கிளந்தான், திரங்கானு, பகாங், நெகிரி செம்பிலான் மற்றும் சரவாக் ஆகிய மாநிலங்களிலும் சில பகுதிகள் இதேபோன்ற மோசமான வானிலையை எதிர்கொள்ளும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

எனவே, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் வானிலை நிலவரத்தை தொடர்ந்து கண்காணித்து, தேவையற்ற வெளிப்புறப் பயணங்களைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.