கோலாலம்பூர், ஆகஸ்ட் 16 - சிலாங்கூர் மற்றும் பல மாநிலங்களுக்கு இன்று மதியம் 1:00 மணி வரை இடியுடன் கூடிய கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சிலாங்கூரில் செப்பாங் மற்றும் கோலா லாங்காட் ஆகிய மாவட்டங்கள் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளாகும் என மலேசிய வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.
பெர்லிஸ் மற்றும் மலாக்கா மாநிலங்கள் முழுவதும் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது;
அதேவேளையில் கெடா, பகாங், நெகிரி செம்பிலான், ஜோகூர் மற்றும் சரவாக் ஆகிய மாநிலங்களின் குறிப்பிட்ட சில பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.






