ஷா ஆலாம், செப்.16 — மலேசியாவின் மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் மற்றும் பேரரசியார் ராஜா சாரித் சோஃபியா ஆகியோர் அனைத்து மலேசியர்களுக்கும் மலேசிய தின வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
மலேசியா தொடர்ந்து இறைவன் அருளைப் பெறவதோடு நாட்டில் நீடித்த அமைதியும் சமாதானமும் நிலவ வேண்டும்.
மேலும், அனைத்து துன்பங்கள் மற்றும் சவால்களில் இருந்தும் மலேசியா பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் மாமன்னரும் பேரரசியாரும் பிரார்த்தனை செய்துள்ளனர்.
இதனிடையே, பல்வேறு இனங்களைச் சேர்ந்த மலேசியர்களிடையே நீண்டகாலமாக நிலவி வரும் ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கு மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் நன்றியைத் தெரிவித்துள்ளார்.
நாட்டின் வலிமை மற்றும் நிலைத்தன்மைக்கு இந்த ஒற்றுமையும் நல்லிணக்கமும் மிகவும் முக்கியமானவை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.







