நாட்டில் 28 இடங்களில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளது

29 ஆகஸ்ட் 2026, 4:15 AM
நாட்டில் 28 இடங்களில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளது

ஷா ஆலம், ஆக. 29: இன்று நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் மோசமடைந்துள்ள நிலையில், 28 பகுதிகளில் காற்று மாசு குறியீடு (API) ஆரோக்கியமற்ற அளவை எட்டியுள்ளன.

அதேவேளை, ஒரு பகுதியில் API அளவு மிக மோசமான நிலையில் பதிவாகியுள்ளது.

காலை 9 மணி நிலவரப்படி சரவாக்கின் ஸ்ரீ அமான் பகுதியில் நாட்டிலேயே அதிகபட்சமாக 221 என்ற API அளவு பதிவாகியுள்ளது. இது மிகவும் ஆரோக்கியமற்ற காற்றுத் தர நிலையாகும்.

மேலும், சிலாங்கூரில் காற்றுத் தரம் மோசமடைந்துள்ள பகுதிகளின் எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படவில்லை. ஷா ஆலாம் பகுதியில் காலை 9 மணி நிலவரப்படி 154 என்ற API அளவு பதிவானது. இதற்கு அடுத்ததாக ஜோஹான் செத்தியா பகுதியில் 153, பெட்டாலிங் ஜெயாவில் 133 என API பதிவாகின.

இதனிடையே, நாட்டின் மேலும் 39 பகுதிகளில் மிதமான காற்றுத் தரம் பதிவாகியுள்ளதாக சுற்றுச்சூழல் துறை தெரிவித்துள்ளது.

காற்றுத் தரம் மோசமடைந்துள்ள பகுதிகளில் பொதுமக்கள் குறிப்பாக குழந்தைகள், முதியவர்கள் மற்றும் சுவாசக் கோளாறு உள்ளவர்கள் வெளிப்புற நடவடிக்கைகளை குறைத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.