ஜோஹான் செத்தியாவில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் பதிவு

17 ஆகஸ்ட் 2026, 3:43 AM
ஜோஹான் செத்தியாவில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் பதிவு

கோலாலம்பூர், ஆகஸ்ட் 17 — நேற்று இரவு நிலவரத்துடன் ஒப்பிடுகையில், இன்று காலை 10 மணி நிலவரப்படி நாடு முழுவதும் காற்றின் தரம் மேம்பட்டுள்ளது.

எனினும், கிள்ளான் ஜோஹான் செத்தியா பகுதியில் மட்டும் காற்றுத் தரக் குறியீடு (API) ஆரோக்கியமற்ற நிலையில் பதிவாகியுள்ளது.

ஜோஹான் செத்தியாவில் API அளவு 151-ஆக பதிவாகியுள்ளது. இது ‘ஆரோக்கியமற்ற’ காற்றுத் தரப் பிரிவில் இடம்பெறுகிறது.

இதனிடையே, நாடு முழுவதும் 58 பகுதிகளில் API அளவு 51 முதல் 100 வரை பதிவாகியுள்ளன.

மேலும் எட்டு பகுதிகளில் API அளவு 50க்கும் குறைவாகப் பதிவாகியுள்ளதால், அங்கு காற்றின் தரம் நல்ல நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.