சிலாங்கூரின் மூன்று ஊராட்சி அமைப்புகளுக்கு தேசிய அளவில் அங்கீகாரம்

13 செப்டெம்பர் 2026, 4:43 AM
சிலாங்கூரின் மூன்று ஊராட்சி அமைப்புகளுக்கு தேசிய அளவில் அங்கீகாரம்

ஷா ஆலாம், செப்.13 — 2026ஆம் ஆண்டுக்கான ஊராட்சி மன்ற நட்சத்திர மதிப்பீட்டு முறையான SPB-PBT-யில் சிலாங்கூரைச் சேர்ந்த மூன்று ஊராட்சி அமைப்புகள் சிறப்பான அங்கீகாரத்தைப் பெற்றுள்ளன.

2026ஆம் ஆண்டுக்கான ஊராட்சி மன்ற நட்சத்திர மதிப்பீட்டு முறை முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி (MBPJ) மாநகர மன்றப் பிரிவில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

அதேவேளையில், உலு சிலாங்கூர் ஊராட்சி மன்றம் (MPHS), நகராட்சி மன்றப் பிரிவில் இரண்டாவது இடத்தையும் சபாக் பெர்ணாம் ஊராட்சி மன்றம் (MDSB), மாவட்ட மன்றப் பிரிவில் மூன்றாவது இடத்தைப் பிடித்து சிலாங்கூருக்குப் பெருமை சேர்த்துள்ளன.

இந்த அங்கீகாரங்கள் 2026ஆம் ஆண்டுக்கான தேசிய ஊராட்சி மன்ற மாநாடு மற்றும் உலக சுற்றுச்சூழல் சுகாதார தினக் கொண்டாட்டத்தின்போது அறிவிக்கப்பட்டன.

இந்தச் சாதனை மூன்று ஊராட்சி மன்றங்களிலும் பணியாற்றும் அனைத்து ஊழியர்களின் அர்ப்பணிப்பையும், சிறந்த நிர்வாகத்தை வலுப்படுத்த அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளையும் பிரதிபலிப்பதாக சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

இந்த அங்கீகாரம் சிலாங்கூரில் உள்ள அனைத்து ஊராட்சி அமைப்புகளுக்கும் மேலும் ஊக்கமளிக்கும் வகையில் அமைய வேண்டும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

மக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் தொடர்ந்து திறமையானதாகவும், விரைவானதாகவும், நேர்மையை அடிப்படையாகக் கொண்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து ஊராட்சி அமைப்புகளும் தொடர்ந்து பாடுபட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அவை மேற்கொள்ளும் பணிகளின் பலன்களை மக்கள் நேரடியாக உணரும்போதுதான் அதன் உண்மையான வெற்றி வெளிப்படும் என்றும் அமிருடின் கூறினார்.

இந்நிலையில், SPB-PBT மதிப்பீட்டில் சிறப்பிடம் பெற்றுள்ள ஊராட்சி அமைப்புகளுக்கு அமிருடின் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.