ஷா ஆலாம், செப். 12: கிள்ளான் பள்ளத்தாக்கு மற்றும் நாட்டின் சில பகுதிகளில் நேற்று பெய்த மழை காரணமாக, தீபகற்ப மலேசியாவில் இன்று காற்றின் தரம் மேம்பட்டுள்ளது.
இன்று நண்பகல் 12 மணி நிலவரப்படி, நாடு முழுவதும் 42 பகுதிகளில் IPU மிதமான நிலையில் பதிவாகியுள்ளது. மேலும் 12 பகுதிகளில் காற்றுத் தரம் நல்ல நிலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், சரவாக்கில் புகைமூட்டத் தாக்கம் தொடர்ந்து காணப்பட்டு வருகிறது. அங்கு ஐந்து பகுதிகளில் காற்றுத் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் பதிவாகியுள்ளது. மற்றொரு பகுதியில் காற்றுத் தரம் மிகவும் ஆரோக்கியமற்ற நிலையில் காணப்படுகிறது.
கடந்த வாரம் முதல் நாட்டின் பல பகுதிகளை பாதித்து வரும் புகைமூட்டம் காரணமாக, சில விளையாட்டு நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டதுடன், சில போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதனிடையே, பொதுமக்கள் காற்றின் நிலையைத் தொடர்ந்து கண்காணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
காற்றின் தரம் மீண்டும் மோசமடையும் பட்சத்தில், வெளிப்புற நடவடிக்கைகளை குறைத்துக்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.







