சரவாக்கில் தொடர்ந்து மோசமடையும் காற்றின் தரம்

4 செப்டெம்பர் 2026, 4:34 AM
சரவாக்கில் தொடர்ந்து மோசமடையும் காற்றின் தரம்

கோலாலம்பூர், செப்.4 : சரவாக்கில் செரியன் பகுதியில் காற்றின் தரம் தொடர்ந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது.

இன்று காலை காற்று மாசுக் குறியீடு (IPU) 518-ஆக அங்கு பதிவாகியுள்ளது. மேலும், கூச்சிங்கிலும் காற்றின் தரம் மோசமான அளவில் மாசு அடைந்துள்ளது. அங்கு IPU அளவு 310 உள்ளது.

சரவாக்கில் மேலும் இரண்டு பகுதிகள் மிகவும் ஆரோக்கியமற்ற காற்றின் தர நிலையைப் பதிவு செய்துள்ளன. சமரஹானில் IPU அளவு 281, ஸ்ரீ அமானில் 245-ஆக பதிவாகியுள்ளது.

இதனிடையே, நாட்டின் 10 பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

அவற்றில் ஆறு பகுதிகள் சரவாக்கில் அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுமக்கள் வெளிப்புற நடவடிக்கைகளைத் தேவைக்கேற்பக் கட்டுப்படுத்தி, குறிப்பாக காற்றின் தரம் மோசமடையும் நேரங்களில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமாகும்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.