நஜிப்பின் பொது மன்னிப்பு கோரிக்கை ஒத்தி வைப்பு : பிரதமர் துறை

11 செப்டெம்பர் 2026, 4:51 AM
நஜிப்பின் பொது மன்னிப்பு கோரிக்கை ஒத்தி வைப்பு : பிரதமர் துறை

ஷா ஆலாம், செப் 11 - முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் பொது மன்னிப்பு கோரிக்கையை, பேரரசர் சுல்தான் இப்ராஹிம் ஒத்தி வைத்துள்ளார்.

அடுத்து நடைபெறும் பொது மன்னிப்பு வாரியக் கூட்டத்தில் அது குறித்து முடிவெடுக்க இணக்கம் காணப்பட்டதாக, பிரதமர் துறை தெரிவித்தது.

இன்று நடைபெற்ற, கோலாலம்பூர், லாபுவான் ,புத்ராஜெயா கூட்டரசு பிரதேசங்களுக்கான 63-வது பொது மன்னிப்பு வாரியக் கூட்டத்தில் அந்த முடிவு எட்டப்பட்டதாக , பிரதமர் துறையின் சட்ட விவகாரப் பிரிவு ஓர் அறிக்கையின் வாயிலாகத் தெரிவித்தது.

முன்னதாக , அந்த கூட்டத்தில் வெளிநாட்டுக் கைதிகள் உட்பட 65 கைதிகளை விடுவிக்கவும் பேரரசர் இணக்கம் தெரிவித்தார். அந்த இணக்கம் உடனடி அமலுக்கு வருகிறது.

விடுவிக்கப்படும் வெளிநாட்டுக் கைதிகள், விடுவிக்கப்பட்ட 6 மாத கால கட்டத்திற்குள் அவர்களது சொந்த நாட்டிற்கு விரட்டியடிக்கவோ அனுப்பவோ செய்ய வேண்டுமெனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

நஜீப்பிற்கு இம்முறை பொது மன்னிப்பு கிடைத்து தமது எஞ்சிய சிறைத் தண்டனை காலத்தை வீட்டுக் காவலில் அனுபவிக்க அனுமதிக்கப்படலாமென, இதற்கு முன் சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

எஸ்.ஆர்.சி இண்டெர்நெஷனல் நிறுவனத்தின் 4 கோடியே 20 லட்சம் ரிங்கிட் நிதியை மோசடிச் செய்த குற்றத்திற்காக, 2020 ஆகஸ்ட் 23 -ஆம் தேதி முதல் நஜீப், காஜாங் சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்.

2020 ஜூலையில், கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் விதித்த 12 ஆண்டு கால சிறைத் தண்டனையையும், 21 கோடி ரிங்கிட் அபராதத்தையும் கூட்டரசு நீதிமன்றம் நிலைநிறுத்தியது.

சிறிது காலத்திலே நஜிப் பொது மன்னிப்புக் கோரினார். 2024 பிப்ரவரி இரண்டாம் தேதி, பொது மன்னிப்பு வாரிய செயலகம், நஜீப்பின் சிறைத் தண்டனைக் காலத்தை பாதியாகவும், அபராதத்தை 5 கோடி ரிங்கிட்டாகவும் குறைத்தது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.