ஷா ஆலாம், செப். 7: கிள்ளான் பள்ளத்தாக்கில் இன்று காலை நிலவரப்படி ஒன்பது பகுதிகள் காற்றுத் தரக் குறியீட்டில் (IPU) ஆரோக்கியமற்ற நிலையைப் பதிவு செய்துள்ளன. அதில் ஜோஹான் செத்தியா 184 அதிகபட்ச IPU பதிவைச் செய்துள்ளது.
காலை 8 மணி நிலவரப்படி, ஷா ஆலாமில் 166, பெட்டாலிங் ஜெயா, பந்திங் மற்றும் கிள்ளான் ஆகிய பகுதிகளில் தலா 158 IPU பதிவாகியுள்ளன. மேலும், கோலா சிலாங்கூரும் (157) ஆரோக்கியமற்ற காற்றுத் தர நிலைக்குள் சென்றுள்ளது.
கோலாலம்பூரில் உள்ள பத்து மூடா பகுதியில் 163, செராஸில் 160 IPU அளவு பதிவாகியுள்ளன. அதேவேளை, புத்ராஜெயாவிலும் IPU 163-ஆக பதிவாகியுள்ளது.
இதனிடையே, சரவாக்கின் சமரஹான் பகுதியில் IPU 226 ஆக உள்ளது. சரவாக்கில் மேலும் 11 பகுதிகள் ஆரோக்கியமற்ற காற்றுத் தரத்தைப் பதிவு செய்துள்ளன.
நெகிரி செம்பிலானிலும் மூன்று பகுதிகள் ஆரோக்கியமற்ற நிலையில் உள்ளன. அவை நீலாய் (1660), சிரம்பான் (164) மற்றும் போர்ட்டிக்சன் (125) ஆகும்.
மலாக்காவில், புக்கிட் ரம்பாய் மற்றும் அலோர் காஜா ஆகிய பகுதிகள் தலா 154 IPU பதிவு செய்துள்ளன. மலாக்காவில் IPU 111 ஆக பதிவாகியுள்ளது.
பேராக்கில் ஐந்து பகுதிகள் ஆரோக்கியமற்ற காற்றுத் தரத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. தைப்பிங்கில் 132, தஞ்சோங் மாலிமில் 160, செரி மஞ்சோங் 159, தாசெக் ஈப்போ 156 மற்றும் பெகோ ஈப்போ 152 என்ற அளவில் IPU பதிவாகியுள்ளது.
பகாங் மாநிலத்தில் தெமர்லோ மற்றும் ஜெரந்துட் பகுதிகளில் முறையே 153 மற்றும் 140 என்ற IPU பதிவாகியுள்ளது. ஜோகூரில் செகாமாட் 157, தங்காக் 154 மற்றும் குளுவாங் 151 என்ற அளவில் காற்றுத் தரக் குறியீட்டை பதிவு செய்துள்ளன.
சபாவில் கோத்தா கினபாலு மற்றும் கிமானிஸ் பகுதிகளில் முறையே 153 என்ற IPU பதிவாகியுள்ளது.
இதனிடையே, நாடு முழுவதும் மேலும் 24 பகுதிகள் மிதமான காற்றுத் தர நிலையில் இருப்பதாகவும், இரண்டு பகுதிகளில் காற்றுத் தரம் நல்ல நிலையில் இருப்பதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன.







