சரவாக்கில் மோசமடையும் புகைமூட்டம்; 4 பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலை

31 ஆகஸ்ட் 2026, 4:46 AM
சரவாக்கில் மோசமடையும் புகைமூட்டம்; 4 பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலை

கூச்சிங், ஆகஸ்ட் 31: சரவாக்கில் புகைமூட்டம் தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. இன்று காலை 9 மணி நிலவரப்படி மாநிலத்தின் நான்கு பகுதிகளில் காற்றுத் தரக் குறியீடு (IPU) ஆபத்தான நிலையை எட்டியுள்ளது.

நேற்று மூன்று பகுதிகள் மட்டுமே ஆபத்தான நிலையில் பதிவாகியிருந்த நிலையில், இன்று அந்த எண்ணிக்கை நான்காக அதிகரித்துள்ளது.

ஸ்ரீ அமான் இன்று ஆபத்தான நிலையில் IPU பதிவான புதிய பகுதியாகும்.

செரியானில் IPU 475 ஆக பதிவாகியுள்ளது. சமரஹான் பகுதியில் 334, ஸ்ரீ அமான் பகுதியில் 330, கூச்சிங்கில் 324 என்ற அளவில் IPU உள்ளது.

சரவாக்கில் மிகவும் ஆரோக்கியமற்ற காற்றின் தரம் பதிவாகியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் சுகாதாரப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமாகியுள்ளது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.