காத்மாண்டு, செப் 5 : பனிப்பாறைகளும், கற்களும் , சகதியும் இமயமலைப் பள்ளத்தாக்கைப் புரட்டிப் போட்டு 10 நாட்களுக்குப் பிறகு, இன்று ( சனிக்கிழமை) அங்கு சுரங்கத்திற்குள் இருந்து சீன நாட்டு ஆடவர் உயிருடன் மீட்கப்பட்டிருக்கிறார்.
திரிசூலி - 1 நீர்மின் ஆலைத் திட்டத்தின் 225 மீட்டர் ஆழ சுரங்கத்தில் இருந்து, லுஹய்தாவ் எனும் அந்த சீன ஆடவர் மீட்கப்பட்டதாக நேபாள இராணுவம் தெரிவித்தது.
நேற்று வெள்ளிக்கிழமை, மீட்புக் குழுவினர் அதே ஆற்றுப் பகுதியில் அமைந்திருக்கும் மற்றொரு நீர்மின் நிலையத்தின் சுரங்கத்தில் இருந்து இருவரை உயிருடன் மீட்டனர்.
கடந்த ஆகஸ்ட் 26-இல் ஏற்பட்ட பனிப்பாறைச் சரிவு, நேபாளத்தின் 6 நீர் மின் நிலையத் திட்டப் பகுதிகளில் உள்ள ஆற்று நீரைப் பெருக்கெடுக்க வைத்தது .
அதையடுத்து, அந்த சுரங்கங்களில் குறைந்தது 900 பேர் சிக்கியிருக்கலாமென ஐயுறப்படுகிறது.







