உட்புறப் பகுதிகளை சென்றடைந்தனர் நேபாள மீட்புக் குழுவினர் : மின்சாரம் திரும்பியது

1 செப்டெம்பர் 2026, 5:55 AM
உட்புறப் பகுதிகளை  சென்றடைந்தனர் நேபாள  மீட்புக் குழுவினர்   : மின்சாரம் திரும்பியது

காத்மாண்டு, செப் 1 - நேபாள மீட்பு பணியாளர்கள் தற்காலிகப் பாலங்களை அமைத்து , வெள்ளப் பாதிப்புக்குள்ளான உட்புறப் பகுதிகளைச் சென்றடைந்து வருகின்றனர்.

அதே வேளை, நீர்மின் ஆலைத் திட்டப் பகுதியை மூடியிருக்கும் இடிபாடுகளைத் தோண்டி, அப்பகுதிக்குள் சிக்குண்டிருக்கும் கிட்டத்தட்ட 300 ஊழியர்களை மீட்கும் நடவடிக்கையையும் விரைவுப்படுத்தியுள்ளனர்.

வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு ஒரு வாரம் நெருங்கும் நிலையில், நீர்மின் ஆலையத்தின் சில பகுதிகளில் ஏறக்குறைய 600 பேர் இன்னும் சிக்கியுள்ளனர். அப்பகுதிகளில் மீட்பு பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வேளையில், பேரழிவை ஏற்படுத்திச் சென்ற பேரிடரில் இருந்து இதுவரை 11,000 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டிருக்கின்றனர் என அந்நாட்டுப் பிரதமர் பலேந்திரா ஷா கூறியுள்ளார்.

பாதிக்கப்பட்ட சில பகுதிகளில் மின் விநியோகம், தொடர்பு முறை மீண்டும் திரும்பியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பனிப்பாறைகளின் சரிவை அடுத்து ஏற்பட்ட வெள்ளப் பெருக்கைத் தொடர்ந்து நேபாளத்தில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 939 -ஆக அதிகரித்துள்ளது.

" ஆயிரக்கணக்கானோர், குடும்பங்கள், வீடுகள் , சொத்துக்கள் ஆகியவற்றை இழந்து தவிக்கின்றனர். அவர்களது வலியை அரசாங்கம் உணர்கிறது. அவர்களை இயல்பு நிலைக்கு திரும்பச் செய்வதற்கான உதவிகளையும் முயற்சிகளையும் அராங்கம் முன்னெடுக்கும் " என , பலேந்திரா ஷா குறிப்பிட்டார்.

வெள்ளத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட நுவாகோட் பகுதிக்குள் சாலைகள் திறக்கப்பட்டுள்ளன. தேடி மீட்கும் பணிகளுக்கும் , நிவாரண உதவிகளைக் கொண்டு சேர்ப்பதற்கும் அது உதவியுள்ளது .

தற்போதைக்கு 4 கோடியே 20 லட்சம் டாலர் பெருமானமுள்ள உதவிகள் பெறப்பட்டுள்ளதாகவும், உதவிகள் இன்னும் அதிகரிக்குமென எதிர்பார்ப்பதாகவும் என அந்நாட்டுப் பிரதமர் கூறினார்.

வகைantarabangsa

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.